ஆப்நகரம்

நாளை ஆரோக்கியமாகத் துவக்குவதும் முடிப்பதும் எப்படி?

தினமும் காலை சோர்வு மற்றும் அயர்ச்சியுடன் எழுந்து அரைகுறையாக சாப்பிட்டு, அவசர அவசரமாக அலுவலம் கிளம்பி, வேலை பளுவால் களைப்புடன் வீடு திரும்பி, நள்ளிரவில் தூங்குவது இன்று பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நாளை ஆரோக்கியமாகத் துவக்குவதும் முடிப்பதும் எப்படி எனப் பார்ப்போம்.

Samayam Tamil 22 Dec 2018, 10:59 am
தினமும் காலை சோர்வு மற்றும் அயர்ச்சியுடன் எழுந்து அரைகுறையாக சாப்பிட்டு, அவசர அவசரமாக அலுவலம் கிளம்பி, வேலை பளுவால் களைப்புடன் வீடு திரும்பி, நள்ளிரவில் தூங்குவது இன்று பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நாளை ஆரோக்கியாமாகத் துவங்கினால்தான் வேலையில் உற்சாகமாக ஈடுபட முடியும். நாளை ஆரோக்கியமாகத் துவக்குவதும் முடிப்பதும் எப்படி எனப் பார்ப்போம்.
Samayam Tamil young-beautiful-woman-doing-yoga-in-nature_1139-909


  • தினம் காலை கிரீன் டீ குடிப்பது மூளை நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். கபைன் ரசாயனம் உள்ள டீ, காப்பி பருகுவதைக் காட்டிலும் கிரீன் டீ சிறந்தது.
  • உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா செய்யும்முன்னர், ’ஸ்ட்ரெச் எக்ஸைஸ்’ எனப்படும் கை, கால், இடுப்பு, முதுகுத் தசைகளை விரிந்து சுருங்கவைக்கும் உடற்பயிற்சி செய்வதால் தசைகள் இறுக்கம் நீங்கி உடல் முழுக்க ரத்தவோட்டம் அதிகரிக்கும்.
  • காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. தினமும் உட்கொள்ளும் காலை உணவுதான் அன்றைய நாள் முழுக்க உழைக்கத் தேவையான கலோரிகளை உற்பத்தி செய்யும்.
  • இஞ்சி, பூண்டு, கிரை, பருப்பு ஆகியவற்றை மதிய உணவில் சேர்ப்பது நல்லது.
  • சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது.
  • சாப்பிட்டும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் (குறிப்பாக மாலை நேரத்தில் தேனீர் அருந்தும்போது) நொறுக்குத் தீனிகள் உட்கொள்வதை குறைத்துக்கொள்வது நல்லது.
  • இரவு உணவை 8 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவு உணவு முடித்து ஒரு மணிநேரத்துக்கு பின்னரே தூங்கச் செல்லவேண்டும். சாப்பிட்டவுடன் படுப்பது, வேகமாக நடப்பது தவறு. இதனால் செரிமானம் தாமதமாகும்.
  • சிலர் இரவு உணவுக்குப்பின் வாழைப்பழம் சாப்பிடும் வழக்கம் கொண்டிருப்பர், இது தவறு. பழங்களை செரிக்க சுரக்கும் செரிமான அமில அளவும், உணவை செரிக்க சுரக்கும் அளவும் வேறு. ஆகவே சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்து பழம் சாப்பிடலாம்.
  • தூங்குவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்னர் படுக்கை அறை விளக்குகளை மங்கலாக்கிவிடுவது நல்லது. இதனால் மூளை தூக்கத்தை தூண்ட வசதியாக இருக்கும். அதீத வெளிச்சத்தில் தூங்க முயற்சி செய்யக் கூடாது.
  • தூங்குவதற்கு முன்னர் இருட்டில் ஸ்மார்ட்போன் திரையில் சமூக வலைதளங்கள் பார்ப்பது இன்றைய இளைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது கண்பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்