ஆப்நகரம்

உடல் சோர்வைத் தடுப்பது எப்படி?

தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா, சைக்கிள் பயிற்சி என உங்களால் முடிந்த சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள்.

Samayam Tamil 8 Mar 2019, 1:22 am
வேலை, பயணம், வயது போன்றவற்றுடன், ஒருசில ஆரோக்கிய பிரச்னைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு போன்றவைகளும் சோர்வுடன் இருப்பதற்கான காரணங்களாகும்.
Samayam Tamil laziness


சோம்பல் வரும்போது ஒரு கப் தேநீர், குளிர்பானம் ஏதாவது அருந்துங்கள். உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.

தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். நடைப்பயிற்சி, ஓட்டம், யோகா, சைக்கிள் பயிற்சி என உங்களால் முடிந்த சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள்.

சரியாக தூக்கம் இல்லையென்றால் சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூங்க வேண்டும்.

புத்துணர்ச்சி பெற எட்டு மணி நேரம் தூக்கம் போதுமானது. அதற்கு பதில் 10 மணி நேரம் தூங்கினால் களைப்பு போகாது, மேலும் களைப்புதான் ஏற்படும். ஆகவே அளவான தூக்கமே உடலுக்கு நல்லது.

இரவில் நேரத்துக்கு உறங்கச்சென்று காலையில் நேரத்துடன் எழும்புங்கள். எந்த வேலையையும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.

காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவுதான் மிகவும் முக்கியமானது. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

காய்கறிகள், பழங்கள் போன்ற ஆரோக்கியத்தை தரும் உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் நன்கு தூக்கம் வருவதுடன், ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும் என்றும் நீடிக்கும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்