ஆப்நகரம்

வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை இருக்கும், நாளடைவில் முடி உதிர்ந்த இடத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும்.

TNN 3 Sep 2016, 1:44 pm
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முடி உதிரும் பிரச்னை இருக்கும், நாளடைவில் முடி உதிர்ந்த இடத்தில் வழுக்கை விழத் தொடங்கிவிடும். குறிப்பிட்ட அளவிற்கு முடி உதிருந்து மீண்டும் வளர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகளவில் உதிர்ந்து மீண்டும் வளராமல் போனால் தான் பிரச்னை.
Samayam Tamil how to overcome bald head
வழுக்கை தலையில் முடி வளர ஆயுர்வேத வழிகள்!!


முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்து வந்தது. ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் பெரிதளவும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு ஆயுர்வேத முறையில் தீர்வு காணுவது எப்படி?

துளசி:

துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

பிராமி எண்ணெய்:

பிராமி என்னும் ஆயுர்வேத மூலிகை, பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டு வைத்திய கடைகளில் பிராமி எண்ணெய் விற்கப்படும். அந்த எண்ணெயை வாரத்திற்கு 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி வந்தால், வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

திரிபாலா:

திரிபலா என்பது மூன்று மூலிகைகள் அடங்கிய பொடி. இதனை மாத்திரை வடிவிலோ, டீ அல்லது பொடி வடிவிலோ பயன்படுத்தலாம். திரிபலா பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 3-4 முறை தடவி ஊற வைத்து அலசி வர வேண்டும்.

ஆளி விதை:

ஆளி விதையை உணவில் சேர்த்து வருவதன் மூலம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆளி விதையை மில்க் ஷேக் உடன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது ஆளி விதையை பொடி செய்து நீரில் கலந்து தினமும் காலையில் குடித்து வரலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்