ஆப்நகரம்

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும் சில இயற்கை டிப்ஸ்

சமீப காலமாக நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

TNN 27 Feb 2017, 4:59 pm
சமீப காலமாக நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil how to shrink ovarian cysts naturally at home
கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்கும் சில இயற்கை டிப்ஸ்


கருப்பை நீர்க்கட்டிகள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் சில நேரங்களில் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான வலி, தசைப்பிடிப்புகள், மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, உடலுறவின் போது வலி, முதுகு அல்லது தொடைகளில் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

கருப்பை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை தவிர்த்து இயற்கை வழிகளை பின்பற்றினால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன், விரைவில் நல்ல பலனும் கிடைக்கும்.

இங்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெப்பம்

வெதுவெதுப்பான நீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனை அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின்னர் சுடுநீர் பாட்டிலை அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.இப்படி வாரத்திற்கு 3 முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும். குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்று மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

எப்சம் உப்பு நீர் குளியல்

ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி தீரும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.

Ovarian cysts are noncancerous fluid filled cysts in the ovaries that affect a large percent of women, according to statistic studies. If you are experiencing uncomfortable symptoms related to ovarian cysts, then fortunately some natural methods can decrease your discomfort or even help you get rid of ovarian cysts.

அடுத்த செய்தி

டிரெண்டிங்