ஆப்நகரம்

dengue virus: மழைக்காலத்தில் டெங்கு வராமல் தடுக்க உணவில் சேர்க்க வேண்டிய 5 பொருள்கள் என்னென்ன...

நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அதன் மூலம் டெங்கு போன்ற மழைக்கால நோய்களை விரட்ட முடியும். எனவே டெங்குவை விரட்ட எந்த மாதிரியான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 20 Nov 2021, 12:19 pm
நம் உடலை பல வகையான நோய்களில் இருந்து காக்க நோயெதிர்ப்பு சக்தி என்பது அவசியமான ஒன்று. அதிலும் இந்த மழைக்காலத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய நோய்கள் ஏராளம். உத்தரபிரதேசம், ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
Samayam Tamil immunity boosting foods for preventing from dengue
dengue virus: மழைக்காலத்தில் டெங்கு வராமல் தடுக்க உணவில் சேர்க்க வேண்டிய 5 பொருள்கள் என்னென்ன...


​பருவ காலமும் நோய்ப் பரவலும்

நம் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது, கொசு உற்பத்தியை தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதும் அவசியம். அப்பொழுது தான் நம் உடலானது கடுமையான வைரஸை எதிர்த்து போராடும். வைரஸூக்கு எதிராக உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கீழ்க்கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

​விட்டமின் சி அடங்கிய சிட்ரஸ் வகைப் பழங்கள் :

சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிரம்பி காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் மூலம் நம் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க முடியும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. சிட்ரஸ் பழங்களில் உதாரணமாக ஆரஞ்சு, லெமன், அன்னாசி மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த பழங்கள் காணப்படுகிறது.

cooking tips: பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத 3 உணவுகள் என்னென்ன...

​யோகார்ட் :

யோகர்ட்டில் பரோ-பயோடிக் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்து, அழற்சி எதிர்ப்பு பண்புகளை உடலில் அதிகரிக்கச் செய்கிறது. யோகார்ட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பூஞ்சை படிந்த பிரட் சாப்பிட்டால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும்...

​மஞ்சள் :

மஞ்சளில் மருத்துவ குணங்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இந்த மழை மற்றும் குளிர் காலத்தில் சளி தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள் மஞ்சளுடன் மிளகுத்தூள் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்பட்ட தொற்றுகள் நீங்கும்.

சர்க்கரை நோயாளிகள் தேங்காய், தேங்காய்ப்பால் சாப்பிடலாமா?

​பூண்டு

பூண்டும் இந்திய வீடுகளில் காணப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாகும். பூண்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் காணப்படுகிறது. எனவே இந்த மழைக்காலத்தில் பூண்டை உணவில் சேர்த்து வரலாம். பூண்டில் உள்ள ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. வைரஸ் தொற்றுக்களால் உண்டாகும் சரும வீக்கம் போன்றவற்றைச் சரிசெய்யவும் உதவுகிறது.

பல வெரைட்டி பாப்கார்ன் பார்த்திருப்பீங்க... வீட்லயே முட்டை பார்ப்கார்ன் செய்வது எப்படி? வைரலாகும் ரெசிபி..

​இஞ்சி

இஞ்சி உடலுக்கு சூடு தரக் கூடியது. இஞ்சியைத் தேநீரில் போட்டுக் காய்ச்சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குடித்து வரலாம். தொண்டைப் புண், வீக்கம், குமட்டல் மற்றும் டெங்கு காய்ச்சலில் இருந்து பிற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க இஞ்சி உதவுகிறது.

சாதாரணமாக நாள் முழுக்க குடிக்கும் தண்ணீரில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, அதோடு சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதை நாள் முழுக்க குடியுங்கள். நோயெதிர்ப்பு கூடுவது மட்டுமின்றி கிருமித் தொற்றால் தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளும் குணமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்