ஆப்நகரம்

Iron Deficiency : இரும்புச்சத்து குறைஞ்சுதுனா உடம்புல இந்த மாற்றமெல்லாம் நடக்குமாம்... அதோட அறிகுறிகள் இதோ...

இரும்புச்சத்து என்பது உடல் ஆற்றலை உற்பத்தி செய்ய உதவுகிறது, மேலும் இரும்புச்சத்து குறைபாடு உடல் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும். இந்த இரும்புச்சத்து தான் நம்முடைய உடலின் ஹீமோகுளோபின் உற்பத்தி அடிப்படையானது. இந்த இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது நம்முடைய உடலில் ஏற்படும் அறிகுறிகளும் மாற்றங்களும் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 22 Apr 2023, 8:16 pm
இரும்புச்சத்து தான் நம்முடைய உடல் முழுவதும் இரத்த சிவப்பணுக்களின் வழியே ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறது. அதனால் எப்போதும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இந்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க முடியும்.
Samayam Tamil iron deficiency symptoms and complications in tamil
Iron Deficiency : இரும்புச்சத்து குறைஞ்சுதுனா உடம்புல இந்த மாற்றமெல்லாம் நடக்குமாம்... அதோட அறிகுறிகள் இதோ...


​பிறக்கும் குழந்தைக்கு சர்க்கரை நோய் வருமா?

​ரத்த சோகை

இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை மிகவும் பொதுவான வகை இரத்த சோகை ஆகும், மேலும் உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்பு இல்லாதபோது இந்தவகை ரத்த சோகை ஏற்படுகிறது.

ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்துக்களும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்படும்போது ரத்த சோகையும் சோர்வு, பலவீனம், சருமம் வெளிறிப் போதல் போன்ற பிரச்சினைகள் உண்டாவதாக தெரிகிறது.

​மனநல குறைபாடு

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது அது நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை உண்டாக்கும்.


மூளை வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கு இரும்பு மிக முக்கியமானது. இந்த இரும்புச்சத்து குறைபாடு கற்றலில் சிரமம் மற்றும் அறிவாற்றல் சிக்கல்களை ஏற்படுத்தும்.
Iron Deficiency : இரும்புச்சத்து குறைபாடு இருந்தா அனீமியா மட்டுமில்ல இந்த பக்க விளைவெல்லாம் கூடவே வருமாம்...

​நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாகும்

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும். இந்த ரத்த வெள்ளை அணுக்கள் தான் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி நோயத் தொற்றுக்கள் உண்டாகாமல் உடலைப் பாதுகாக்கிறது.

வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இரும்புச்சத்து அவசியம், இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

போதுமான இரும்புச்சத்து இல்லாமல், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் உடலின் திறன் சமரசம் செய்யப்படுகிறது.

​உடல் செயல்பாடு குறையும்

இரும்புச்சத்து குறையும் போது ரத்த சோகை (அனீமியா) போன்ற பிரச்சினைகள் உண்டாவதால் உடலின் இயக்கம், செயல்பாடு ஆகியவை குறையும்.



இரும்புச்சத்து குறைபாடு உடல் ஆற்றலைக் குறைத்து உடலின் செயல்திறன் குறையும்.
இதனால் அதிகப்படியான உடல் சோர்வும் பலவீனமும் ஏற்படும்.

diet for anemic: ரத்தசோகை பிரச்சினை இருக்கறவங்க என்ன மாதிரி உணவுமுறை பின்பற்றலாம்?...

​கர்ப்பகால சிக்கல்

கர்ப்ப கால சிக்கல்கள் அதிகரிக்கும் ஆபத்து இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படும் போது உண்டாகிறது. இது வெறுமனே தாய்க்கு மட்டுமின்றி வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து முக்கியமானது. அதனால்தான் ஆரம்ப காலத்திலேயே இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

​முடி உதிர்தல்

நம்முடைய உடல் இரும்புச்சத்துக்களை முறையாக உறிஞ்சுதல் முடி வளர்ச்சிக்கு உதலி செய்யும். உங்கள் உணவில் இரும்புச்சத்து இல்லாததால் முடி உதிர்வு ஏற்படலாம்.


இந்த அறிகுறிகள் இருந்தா வைட்டமின் பி12, ஃபோலேட் குறைபாடு, அனீமியா எல்லாம் இருக்குனு அர்த்தமாம்...
அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி ஜர்னலின்படி, போதிய அளவு இரும்புச்சத்து இல்லாத போது வேர்க்கால்களில் ரத்த ஓட்டம் குறைவதோடு வேர்க்கால்களில் புதிய செல்கள் உருவாவது ஆகியவை தடைபடும் என்று கூறப்படுகிறது. இதனாலும் முடியின் வேர்க்கால்கள் பலவீனமடைந்து முடி உதிர்தல் அதிகரிக்கும்.

​நோய்த்தொற்று அதிகமாகும்

இரும்பு நம்முடைய உடலில் ஆன்டி பாடிகளை உருவாக்குவதற்கு உதவி செய்யும். இந்த ஆன்டி பாடிகள் தான் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவி செய்யும். இதுவே இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது ஆன்டிபாடிகள் உற்பத்தி குறைந்து தொற்றுநோய்கள் எளிதாக உண்டாவதற்கான ஆபத்தை உருவாக்குகிறது.

​இரும்புச்சத்து குறைபாட்டை தவிர்ப்பது எப்படி?

சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, நட்ஸ், விதைகள் மற்றும் கரும் இலை கீரைகள் போன்ற இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரும்புச்த்து செறிவூட்டப்பட்ட செரல் வகைகள்,, ஓட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

பாதாம், உலர் திராட்சை, திராட்சை பழங்கள் போன்றவற்றில் நிறைய நர்ச்சத்துக்கள் கிடைக்கும்.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்வதன் மூலம் தாவர மூலங்களிலிருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த முடியும்.

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், தக்காளி, மிளகுத்தூள் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மட்டும்போதாது, இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிற வகையிலான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக பால் மற்றும் பால் பொருள்கள் உள்ளிட்ட கால்சியம் நிறைந்த பொருள்களை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்