ஆப்நகரம்

பெண்ணுறுப்பு எப்போதுமே ஈரமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்ன காரணம்?...

புணர்ச்சியின் போது மட்டுமல்ல மற்ற பல காரணங்களாலும் பெண்ணுறுப்பு ஈரப்பதம் அடைய வாய்ப்பு உள்ளது. எந்த மாதிரியான காரணங்கள் பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருக்க காரணமாக அமைகிறது என அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 9 Oct 2020, 12:48 pm
இதுவரை பெண்ணுறுப்பு வறட்சி பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருப்போம். பெண்ணுறுப்பு வறட்சியாக இருப்பது சில சுகாதார பிரச்சனைகளின் அடிப்படையாக கூட இருக்கலாம். அதே மாதிரி பெண்ணுறுப்பு ஈர்ப்பதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா. பெண்ணுறுப்பு அதிக ஈரப்பதத்துடன் இருப்பதற்கும் பல அடிப்படை சுகாதார பிரச்சினைகள் காரணமாக இருக்கும் என மகப்பேறியியல் மருத்துவர் கூறியுள்ளார். நிறைய பெண்கள் புணர்ச்சியின் போது மட்டுமே பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
Samayam Tamil is your vagina supposed to be wet all the time reasons why
பெண்ணுறுப்பு எப்போதுமே ஈரமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்ன காரணம்?...


​காரணங்கள்

பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது நிறைய பேருக்கு தெரிவதில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே பெண்கள் இது குறித்து அடிப்படை சரியான கருத்தை பெறுவது அவசியம்.

புனேவின் கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் இது குறித்து கூறுகையில் ஈரமான பெண்ணுறுப்பு இருப்பது ஒருவகையில் நல்லது. ஏனெனில் உலர்ந்த பெண்ணுறுப்பால் எரிச்சல், அரிப்பு மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

பெண்ணுறுப்பை ஈரமாக்குவது எது

உடலுறவில் ஈடுபடும் போது பெண்ணுறுப்பானது திரவங்களை சுரக்கிறது. இதனால் பெண்ணுறுப்பு ஈரப்பதத்தை பெறுகிறது. அந்த பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் இந்த திரவ வெளியேற்றம் ஏற்படுகிறது. இந்த திரவம் ஜெல் போன்ற சளியாகும். இந்த ஜெல் கருப்பை வாய் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனால் இது தூண்டப்படுகிறது.

பெருங்குடல் அல்சரா? புண்களை வேகமாக ஆற்ற என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

​இயல்பானதா?

பெண்ணுறுப்பு அதிக ஈரப்பதத்துடன் இருப்பது சாதாரண விஷயமா? என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட அளவு வரை ஈரமாக இருப்பது வரை இயல்பானதுதான். ஆனால் அதுவே

உங்கள் பெண்ணுறுப்பு அதிக ஈரப்பதத்துடன் இருந்து அடிக்கடி உள்ளாடைகளை மாற்ற வழிவகுக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. இது பெண்ணுறுப்பில் ஏற்பட்ட தொற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் பெண்ணுறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா என சுயபரிசோதனை மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

​பாக்டீரியா வஜினோசிஸ்

ஒரு லேசான பெண்ணுறுப்பு தொற்று என்பது பாலியல் மூலம் பரவும் தொற்று கிடையாது. நம் பெண்ணுறுப்பில் ஏற்கனவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். இது கெட்ட பாக்டீரியாக்களால் பெண்ணுறுப்பின் நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலைந்து சாம்பல் நிறமான திரவ வெளியேற்றம் அல்லது மஞ்சள் நிற திரவ வெளியேற்றத்தை ஏற்படுத்துகிறது. நிறைய பேருடன் உடலுறவு கொள்வதன் மூலமும் இந்த நிலை ஏற்படலாம்.

​இடுப்பு அழற்சி நோய்க்குறி

இடுப்பு அழற்சி நோய்க்குறியால் கூட பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருக்கலாம். பெண்ணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால் ஈரப்பதம் ஏற்படுகிறது. உடலுறவு , சைக்கிள் ஓட்டுதல் அல்லது வேறு ஏதும் உடல் செயல்பாடுகளால் கூட பெண்ணுறுப்பு ஈரப்பதம் அடையலாம்.

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடக் கூடாத முக்கியமான ஐந்து உணவுகள் என்னென்ன?

​டெஸ்காமேடிவ் வெஜினிடிஸ்

பெண்ணுறுப்பில் உள்ள செல் வீக்கமடையும் போது டெஸ்காமேடிவ் யோனிடிஸ் ஏற்படுகிறது. இதன் முக்கிய அறிகுறிகளாக கனமான மஞ்சள், பச்சை-மஞ்சள் பெண்ணுறுப்பு திரவ வெளியேற்றம் ஏற்படும். இதனால் வலி மிகுந்த உடலுறவு, துர்நாற்றம் வீசுதல் போன்றவை ஏற்படலாம்.

எனவே இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உங்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது பலனளிக்கும். எனவே பெண்ணுறுப்பு ஈரப்பதமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்பதை முதலில் பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்