ஆப்நகரம்

lip cancer: உதடு புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்... எப்படி தடுக்கலாம்...

உலக அளவில் இதய நோய்களை அடுத்து அதிகமாக பாதிக்கப்படுவதும் இறப்பது புற்றுநோயால் தான். அவற்றில் முதல் இடத்தில் இருப்பது நுரையீரல் புற்றுநோய். அதையடுத்து மார்பக புற்றுநோய் தொடங்கி, பல்வேறு புற்றுநோய்களும் உண்டாகின்றன. அவற்றில் வாய் புற்றுநோயில் பல வகையுண்டு. அதில் ஒன்று தான் உதடு புற்றுநோய். இது யாருக்கெல்லாம் வரும், என்னென்ன காரணங்களால் வரும் என்று பார்ப்போம்.

Samayam Tamil 30 Jun 2022, 1:29 pm
உதடு புற்றுநோய் வாய் மற்றும் உதட்டுப் பகுதிகளில் புண்களாகவோ அல்லது திசுக்களாகவோ அசாதாரணமாக வளர தொடங்கும். உதடு மற்றும் வாயின் மேற்பரப்பு அடுக்கு மீது செதிள் செல்கள் திரட்சியடைந்து காணப்படும். மற்ற வகை வாய்ப் புற்றுநோயைப் போலவே, உதடு புற்றுநோயும் வாய் மற்றும் உதடுகளின் மேற்பரப்பு அடுக்கில் செதிள் செல்கள் குவிவதன் விளைவால் உண்டாகும், சிறிய புண் அல்லது கொப்புளம் போல இருக்கும் இது மிக அசாதாரணமாக, வேகமாக வளரத் தொடங்கும்.
Samayam Tamil lip cancer causes symptoms and conditions
lip cancer: உதடு புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்... எப்படி தடுக்கலாம்...


​உதடு புற்றுநோய்க்கான காரணங்கள்

புற ஊதாக் கதிர்களின் அதிக வெளிப்பாடு காரணமாக உதடு புற்றுநோய் ஏற்படலாம்.

இது தவிர, உதடு புற்றுநோய்க்கான பிற காரணங்களில் சிலவும் உண்டு. குறிப்பாக,

புகையிலை பயன்பாடு,

அதிக மது அருந்துதல்,

காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற ஊட்டச்சத்து இல்லாத உணவு,

சில மரபணு நோய்க்குறிகள்,

பாலினம் (பெண்களை விட ஆண்களுக்கு உதடு புற்றுநோய் அதிகம்) மற்றும் வயது ஆகியவையும் உதடு புற்றுநோய் ஏற்படக் காரணமாகின்றன.

​உதடு புற்றுநோய் ஆபத்தானதா?

உதடு புற்றுநோய் வாய் புற்றுநோய் வகையின் கீழ் அடங்கும். உலகளவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் புற்றுநோய்களில் 3 சதவிகிதம் வாய் மற்றும் வாய் சம்பந்தப்பட்ட புற்றுநோயாகும்.

அதேசமயம் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, உதடு புற்றுநோய் மிகக் குறைவான நபர்களுக்கே உண்டாகிறது. அதாவது சுமார் 0.1 சதவீதம் அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கே உதடு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

​உதடு புற்றுநோயின் அறிகுறிகள் என்ன

உதடு புற்றுநோய் குறித்த சில எச்சரிக்கும் அறிகுறிகளை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அவற்றில் உதடுகளில் ஏற்படும் காயம், கொப்புளம், கட்டி அல்லது உதட்டில் புண் போன்றவை ஏற்பட்டால் அது அவ்வளவு எளிதில் குணமடையாது.

உதட்டில் அடர் சிவப்பு நிறத் திட்டுகள்,

தொடர்ந்து உதட்டில் ஏற்படும் வலி அல்லது உணர்வின்மை,

உதடு தடித்தல்,

உதட்டில் திடீரென ரத்தம் வடிதல்

போன்றவையும் உதடு புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும். இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

​உதடு புற்றுநோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

நம்முடைய வயதாவதைத் தவிர்க்கவோ அல்லது மரபணு ரீதியான விஷயங்களையோ நம்மால் மாற்ற முடியாது. ஆனால் உதடு புற்றுநோயைத் தடுப்பதற்கு நம்முடைய உணவில் சில மாற்றங்களைச் செய்ய முடியும்.

ஆரோக்கியமான உணவை உட்கொள்வது,

புகையிலை பயன்பாட்டைத் தவிர்ப்பது ம

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது,

சூரிய ஒளியில் உதடு நேரடியாக படாமல் பாதுகாப்பது,

போன்றவற்றைச் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்