ஆப்நகரம்

இதயப் பிரச்சினைக்கு மக்னீசியம் குறைபாடும் காரணமாக இருக்கும்... வேறு என்னென்ன அறிகுறி ஏற்படும்...

இந்த கட்டுரையில், உடலில் மக்னீசியம் குறைவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மக்னீசியம் குறைபாடு தோல்,, சதை ஆகியவற்றினை பாதிக்கிறது. இன்சோம்னியா, மன அழுத்தம் ஆகியவற்றை உருவாக்குகிறது. எனவே மக்னீசியம் உள்ள உணவுகளை உண்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கிறது என்று பொருள்

Samayam Tamil 30 Aug 2021, 5:34 pm
மக்னீசியம் குறைபாடு என்பது மக்னீசியம் எனும் ஊட்டச்சத்து ஆனது ரத்தத்தில் குறைவாக இருப்பதை உணர்த்துகிறது. இந்தத கட்டுரையில் குறிப்பிடப்படும் அறிகுறிகள் உங்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால் உடலில் மக்னீசியம் குறைபாடு இருக்கிறது என்பது பொருளாகும்.
Samayam Tamil magnesium deficiency can cause heart problems and other symptoms
இதயப் பிரச்சினைக்கு மக்னீசியம் குறைபாடும் காரணமாக இருக்கும்... வேறு என்னென்ன அறிகுறி ஏற்படும்...


​மக்னீசியம்

உடல் மற்றும் இரத்தத்தில் மக்னீசியம் இருந்தால்தான் இதயம், தசைகள்,சிறுநீரகம் போன்ற உடல் பாகங்கள் சரியாக செயல்பட முடியும். பொதுவாக. உடலில் அவசியம் இருக்கவேண்டிய ஊட்டச்சத்துக்களில் கால்சியம். பொட்டாசியம். சோடியம். அடுத்தபடியாக மக்னீசியம் இருக்கிறது. இவை அதிக அளவில் தசை மற்றும் நரம்பு அமைப்பு, இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உடலில் விட்டமின் டி அதிகப்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மக்னீசியம் நமது உடலில் குறைபாடு ஏற்பட்டால் அவை உடல் ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. கீழ்க்கண்ட அறிகுறிகள் மக்னீசியம் குறைபாட்டால் ஏற்படுகின்றன.

​தசைப்பிடிப்பு மற்றும் வலி

மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் தசை மற்றும் நரம்பு அமைப்பு செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, அடிக்கடி தசை பிடிப்பு மற்றும் முட்டு வலி போன்றவை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் தசையை பிசைவது போல வலி உண்டாகும். அதற்கு வெறுமனே வலி நிவாரணி எடுத்துக் கொள்வோம். ஆனால் அந்த வலிக்கான அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக மக்னீசியம் குறைபாடு என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.

​வாந்தி

வாந்தி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அடிக்கடி ஆற்றல் குறைபாடு ஏற்படுவது, வாந்தி, உடல் பலவீனமாக உணர்தல் போன்றவை மக்னீசியம் குறைபாடு காரணமாக ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும்.

எடையை குறைக்க தினமும் குடிக்க வேண்டிய பானங்கள் என்னென்ன... என்னென்ன குடிக்கக் கூடாது...

​தூக்கமின்மை

அடிக்கடி இரவில் தூக்கம் வராமல் இருக்கிறது என்றால் மக்னீசியம் குறைபாடும் காரணமாக இருக்கலாம். உடல் சோர்வு, வாந்தி வருதல், கவனச்சிதறல் ஆகியவை காரணமாக தூக்கம் வராமல் தடுக்கப்படும். சரியான நேரத்திற்கு மற்றும் தேவையான நேரத்திற்கு தூங்க வேண்டியது அவசியம். அவை உடலை நல்ல முறையில் பாதுகாக்கும். மக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால் இவை பாதிப்பு ஏற்படும் என்பதில் கவனம் தேவை. தூங்காமல் இருந்தால் அவை மூளையை பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருக்கவும்.

அடிக்கடி மன அழுத்தம் உருவாவது அன்சைட்டி உருவாவதற்கு மற்றும் தூக்கம் குறைவாக இருப்பது, ஞாபக சக்தி குறைவாக இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்னீசியம் குறைபாடு காரணமாக அமைந்துவிடுகிறது.

​தலைவலி

மக்னீசியம் குறைவு நரம்பு மண்டலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துவதால் அடிக்கடி தலைவலி போன்றவை ஏற்படுகிறது. ரத்த செல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலிக்கும் ஊட்டச்சத்து குறைபாட்னால் ஏற்படும் தலைவலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதை உணர்ந்து கொள்வது மிக அவசியம்.

​எழும்பு சத்து குறைபாடு

அடிக்கடி உடலின் எழும்பு வலித்தால், பலவீனமாக உணரப்பட்டால் அவை மக்னீசியம் குறைபாடு காரணமாக ஏற்படும் என்பதால் கவனம் தேவை. கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மட்டுமே எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு பிரச்சினைகள் மற்றும் மூட்டுவலி, ஆர்த்தரிட்டீஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று அர்த்தமில்லை. மக்னீசியம் குறைபாட்டினாலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகலாம்.

கௌட் பிரச்சினை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்... எதை தவிர்க்க வேண்டும்

​இதயம் சார்ந்த நோய்கள்

இதயத்தில் பிடிப்பு, வலி போன்றவை அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கவனமாக இருக்கவும். ஏனெனில் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்தத்தில் சுகர் அளவை கட்டுப்படுத்தி இதயத்துடிப்பில் மாற்றம் வராமல் தடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்னிசியம் பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

இத்தனை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக நீங்கள் கட்டாயமாக மக்னிசியம் உடலில் அதிகப்படுத்துவது அவசியமானதாகும். அதற்கு தேவையான ஆலோசனைகளை இப்பொழுது பார்க்கலாம்

மக்னீசியம் அதிகம் இருக்கக்கூடிய வைட்டமின் மாத்திரைகள், கீரைகள், பழங்கள், அவகோடா, அரிசி, தயிர், பாதாம், முந்திரி, கடலை உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் மக்னீசியத்தினை அதிகப்படுத்தலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்