ஆப்நகரம்

தயிரின் மருத்துவ குணங்கள்...!!

பழங்காலம் தொட்டே தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் தயிர் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது என்பதை தவிர்த்து பல அரிய மருத்துவ குணங்கள் தயிருக்கு உண்டு.அவை என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

TNN 28 Jul 2016, 5:29 am
பழங்காலம் தொட்டே தமிழர்களின் உணவுப்பழக்கத்தில் தயிர் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது என்பதை தவிர்த்து பல அரிய மருத்துவ குணங்கள் தயிருக்கு உண்டு.அவை என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil medical facts of curd
தயிரின் மருத்துவ குணங்கள்...!!

தூக்கம் வராமல் தவிப்பர்கள்,இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு கைப்பிடி அளவிற்கு தயிரை தலையில் தேய்த்தால் தூக்கம் சிறப்பாக வரும்.
தயிர் நல்ல ஜீரண சக்தியை தரும்.சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே 91 சதவீத தயிர் ஜீரணமாகிவிடும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள்,குடலில் உருவாகும் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் தருகிறது.உடல் சூட்டின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் போது,வெந்தயத்துடன் தயிரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்தால் முடி மிருதுவாக,பளிச்சென தோற்றமளிக்கும்.
புற்றுநோய் தடுக்கும் திறனும்,மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மையும் தயிருக்கு உண்டு.
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தயிர் தடுக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்