ஆப்நகரம்

உஷார்! மார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கும் வரும்!

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

TNN 29 Oct 2017, 7:18 pm
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வரும் நிலையில் ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Samayam Tamil men too can have breast cancer hear it from a survivor
உஷார்! மார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கும் வரும்!


உலக அளவில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோய்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது மார்பகப் புற்றுநோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 61 சதவீதம் பேர் இந்தியர்கள்தான்.

பொதுவாக 35 வயதுக்கு பின்னர் ஏற்படும் நோயாக கருதப்பட்டாலும் சிலருக்கு இளவயதிலேயே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். உடனே சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோய் தீவிரமடையும் முன் தடுக்கலாம். ஆனால், பலரும் இதை அலட்சியம் செய்வதால் நிலைமை மோசமாகிவிடுகிறது.

பெண்களுக்கு அதிகம் உண்டாகும் நோய் என்றாலும் ஆண்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 2 சதவீதம் மார்பகப் புற்றுநோய்தான்.

மார்பகப் புற்றுநோய்க்குக சிசிச்சை பெற மருத்துவரை அணுகுபவர்களில் 60 சதவீதம் பேர் நோயின் நிலை மோசடைந்த பின்பே வருகிறார்கள். அவர்களை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவுதான். சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோயை 95 சதவீதம் தவிர்த்துவிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்