ஆப்நகரம்

எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் கான்ஸ்டபிள்

மும்பை காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் கடம் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 130 கிலோ எடை கொண்டிருந்த கடம் தற்போது 25 கிலோ எடையை அறுவை சிகிச்சைமூலம் குறைத்துள்ளார்.

Samayam Tamil 14 Feb 2019, 1:04 pm
மும்பை காவல் நிலையத்தில் பெண் கான்ஸ்டபிள் கடம் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 130 கிலோ எடை கொண்டிருந்த கடம் தற்போது 25 கிலோ எடையை அறுவை சிகிச்சைமூலம் குறைத்துள்ளார்.
Samayam Tamil sdfsdsdsd


மும்பை போரிவ்லி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் கான்ஸ்டபிள் ருபாலி கடம்(30) எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். 132 கிலோ எடை கொண்டிருந்த கடம் தற்போது 25 கிலோ எடையை அறுவை சிகிச்சைமூலம் குறைத்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான கடம், மும்பைக்கு மாற்றலாகி வந்த போது துரித உணவுப் பழக்கம் காரணமாக எடை போட்டார். ஒருமுறை கைதிகளை கொண்டுசெல்லும்போது எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனையைக் கண்டார். அங்கிருந்த மருத்துவர்களிடம் தன் அதீத எடைகுறித்து தெரிவித்தார். மருத்துவர்கள் ஸ்லீவ் அறுவை சிகிச்சை மூலம் 25 கிலோவரை எடையை குறைக்கலாம் என்றனர். இதற்கு ரூ. 50,000 வரை செலவானது.

எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள் அழகு சிகிச்சை பட்டியலில் இடம் பெறுவதால் இத்தொகையை காவலர் காப்பீட்டில் இருந்து அவரால் பெற இயலவில்லை. தானே பணம் திரட்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இன்னும் ஆறு மாதங்களில் தொடர் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி மூலம் படிப்படியாக 80 கிலோ வரை உடலை குறைக்க உள்ளார் கடம்.

தற்போது தான் பழைய நிலைக்குத் திரும்பி வருவதாக கூறும் கடம், இனி தான் வேலையில் மேலும் உற்சாகத்துடன் செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்