ஆப்நகரம்

வந்தாச்சு… இன்சுலின் மாத்திரைகள்!

சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி மூலமாக வலியோடு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில், இன்சுலின் மாத்திரைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

TNN 25 Aug 2016, 4:02 am
சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி மூலமாக வலியோடு சிகிச்சை எடுத்துக் கொள்வதில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில், இன்சுலின் மாத்திரைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Samayam Tamil new insulin pill could make diabetes treatment painless
வந்தாச்சு… இன்சுலின் மாத்திரைகள்!


அந்நாட்டின் நயாகரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும் வகையில் இன்சுலின் மாத்திரைகளை தயாரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

தற்போது சோதனை முயற்சியில் உள்ள இந்த மாத்திரைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், அப்போது இன்சுலின் ஊசிகளை பயன்படுத்தாமல், எளிதாக, சர்க்கரை நோயை எதிர்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

குளோஸ்டோசோம் எனப்படும் லிபிட் அடிப்படையிலான புரதத்தை கொண்டு, இந்த மாத்திரைகளை தயாரித்துள்ளனர். இதனை வாய் வழியாக விழுங்கினால், ரத்தத்தில் கலந்து, தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யும் என்றும், இதன்மூலமாக, சர்க்கரை கட்டுக்குள் வரும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வழிமிகுந்த இன்சுலின் ஊசி சிகிச்சையில் இருந்து, சர்க்கரை நோயாளிகள் விடுபடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்