ஆப்நகரம்

எடையும் குறையணும்... நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகணுமா... ஆரஞ்சு ஜூஸ்ல இந்த பொருள கலந்து குடிங்க...

ஆரஞ்சு மற்றும் துளசி இரண்டுமே நிறைய நன்மைகளைத் தரக் கூடிய பொருட்களாகும். இவைகள் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது. இந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம் என இப்பொழுது நாம் பார்க்கலாம்.

Samayam Tamil 18 Aug 2020, 8:06 pm
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் எடை இழப்பு என இரண்டையும் ஒரே பொருள் தந்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா என்ன. அப்படித்தான் இந்த ஆரஞ்சு துளசி ஜூஸ் நம்மளுக்கு உதவுகிறது. ஆரஞ்சியும் துளசியும் நோயெதிரிப்பு சக்தி கொண்டது என்பது முன்னாளயே நம்மளுக்கு தெரியும். ஆனால் இது உங்களுக்கு எடை இழப்பையும் தருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. நீங்கள் தினசரி புத்துணர்ச்சியுடன் செயல்பட இந்த ஆரஞ்சு துளசி சாறு சிறப்பான தேர்வு.
Samayam Tamil orange basil juice to boost immunity and weight loss in tamil
எடையும் குறையணும்... நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகணுமா... ஆரஞ்சு ஜூஸ்ல இந்த பொருள கலந்து குடிங்க...


​நோயெதிர்ப்பு ஆற்றல்

இந்த மாதிரியான பழச்சாறுகளை உட்கொள்வது உங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பழச்சாறுகள் எளிதில் சீரணிக்க கூடியவை, ஆரோக்கியமானவை. பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் போது நிறைய பழங்களை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஜூஸ் தயாரிப்பது வெறும் நொடிப் பொழுது வேலையான ஒன்றும் கூட. மேலும் ஜூஸ் உங்க தாகத்தை தணிக்கவும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கவும் உதவுகிறது. இந்த ஆரஞ்சு துளசி ஜூஸ் ஒரு உடனடி எனர்ஜி பூஸ்டர். உங்க உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான விட்டமின் சி தேவையை வழங்குகிறது.

​ஆரஞ்சு துளசி ஜூஸின் பயன்கள்

ஆரஞ்சு பழம் பூஜ்ஜிய கலோரி கொண்ட பழமாகும். இது அதிக கலோரிகளை எரிக்கும் சக்தி வாய்ந்தது. ஆரஞ்சு சாறு உண்மையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வயிற்று வீக்கம் போன்றவற்றை குறைக்கிறது. எனவே நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் உங்க அன்றாட உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பது அவசியம்.

மெலனின் நிறமி ஏன் முக்கியம்? அதிகரிக்கும் என்ன செய்ய வேண்டும்?

​ஆரஞ்சு துளசி ஜூஸ் தயாரிக்கும் முறை

தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சுகளை துளசி இலைகளுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை ஒரு கிளாஸில் வடிகட்டி கொள்ளுங்கள். உங்க சுவைக்கு வேண்டுமானால் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளுங்கள். துளசி இலைகள் மற்றும் ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றைக் மேலே சேர்த்து கொள்ளுங்கள். காலையில் இந்த புத்துயிர் பானத்தை குடித்து எனர்ஜிட்டிக் ஆக இருங்கள்.

தினமும் 1 எலுமிச்சையாவது ஏன் சாப்பிடணும்?... இந்த பத்து விஷயம் தான் காரணம்...

​துளசி இலையின் ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கியமான குடல் முதல் வலுவான நோயெதிரிப்பு சக்தி வரை துளசி இலைகளின் நன்மைகள் நிறையவே உள்ளன. எனவே தான் இந்தியாவில் மிகச்சிறந்த மூலிகைகளில் துளிசி இலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஆரஞ்சு துளசி சாற்றை உங்க வீட்லயே தயாரித்து உங்க எடையை பேணிக் காப்பதோடு நோயெதிரிப்பு சக்தியையும் அதிகரித்து வாருங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்