ஆப்நகரம்

குளிர்காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்...

பப்பாளியில் பலவித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குளிர்காலத்தில் கூட பப்பாளியை பயமின்றி அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். குளிர்காலத்தில் ஏன் பப்பாளியை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

Samayam Tamil 17 Dec 2021, 5:33 pm
Samayam Tamil papaya for winter in tamil
குளிர்காலத்தில் பப்பாளி பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்...
குளிர்காலம் துவங்கி விட்டது, இந்த நாட்களில் தான் பல நோய்த் தொற்றுகளும் நம்மைத் தாக்கும். சளி, காய்ச்சல் போன்ற பல தொற்றுகளில் இருந்து தப்பிக்க பலரும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர். குளிர்காலத்தை சமாளிக்க முதலில் எப்போதும் நம் உடலை சூடாக வைத்து இருக்க வேண்டும். அதற்கு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, குளிர்காலத்துக்கு ஏற்ற உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

​ஆயுர்வேதத்தில்

ஆயுர்வேத மருத்துவத்தின் கருத்துப்படி, பப்பாளியை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, குளிர்காலத்திற்கு ஏற்ற பழங்களில் ஒன்று பப்பாளி. ஏனெனில், இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும்.

இது குளிர்ச்சியை சமாளிக்க உதவும் இயற்கையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான வழி ஆகும். சுவையைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் நீங்கள் எனில், பப்பாளியின் விதையைக் கூட சாப்பிடலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்