ஆப்நகரம்

பி.சி.ஓ.எஸ் உடல் பருமன் உண்டாக்கும் கருவுறுதல் முதல் நீரிழிவு பிரச்சனை வரை, நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!


பிசிஓஎஸ் பிரச்சனையை எதிர்கொண்டுவரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் உண்டாகும் பிரச்சனைகளில் உடல் பருமனும் ஒன்று. ஆனால் இந்த உடல்பருமனால் பல்வேறு விதமான நோய்களும் வந்துவிடுகிறது.

Samayam Tamil 10 Jul 2020, 7:18 pm
பெண்கள் சமீபவருடங்களாக பிசிஓஎஸ் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். இந்தியாவில் 10 பெண்களில் 4 முதல் 5 பெண்களாவது பிசிஓஎஸ் பிரச்சனையை கொண்டிருக்கிறார்கள். இது குறித்த அறிகுறிகளில் மிக முக்கியமானது மாதவிடாய் சீரற்று வருவதும், உடல் எடை அதிகரிப்பதும் தான். அதே நேரம் பிசிஓஎஸ் என்பது குணப்படுத்த முடியாத நோயல்ல முறையான சிகிச்சை எடுத்துகொண்டால் அவை தீர்க்ககூடியதுதான். ஆனால் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தும் போது அவை தீராத நோய்களை உண்டாக்கிவிடுகிறது. அப்படி உண்டாக்கும் நோய்கள் குறித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது
Samayam Tamil pcos obesity will make more health problems you must know here
பி.சி.ஓ.எஸ் உடல் பருமன் உண்டாக்கும் கருவுறுதல் முதல் நீரிழிவு பிரச்சனை வரை, நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்!


​உடல் எடை குறைவதில் சிக்கல்

பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தாலே உடல் எடை குறைப்பில் கடுமையான டயட் பின்பற்றினாலும் முறையான சிகிச்சை பெறாவிட்டால் உடல் எடை குறையவே செய்யாது.


Period Problems : ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை.. அறிகுறிகள்.. ஆபத்துகள்.. ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயங்கள்..


பிசிஓஎஸ் என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் உருவாகக்கூடியது. அதனால் உடற்பயிற்சியும், அதற்கேற்ற உணவு வகைகளையும் எடுத்துகொள்வதன் மூலம் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலையைக் கட்டுப்படுத்தி ஹார்மோன் சமநிலையின்மையை சரியாக்கும். அதனால் உடல் எடை குறைப்பதில் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையும் முயற்சியும் அவசியம் தேவை. அப்போதுதான் படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். இல்லையெனில் வேறு நோய்களும் ஆக்ரமிக்க கூடும். இது குறித்து தெரிந்துகொள்வோம்.

​கருவுறுதலில் பிரச்சனை

இது மிக முக்கியமான பிரச்சனையும் கூட. பலரும் தாங்கள் பிசிஓஎஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்துகொள்வதே இந்த கருவுறுதல் பிரச்சனையை சந்திக்கும் போதுதான். மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் ஹார்மோன்களின் சமநிலை காரணமாகத்தான் பிசிஓஎஸ் பிரச்சனை உண்டாகிறது. பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்தும் ஆண்களுக்கான புரொஜெஸ்ட்ரான் சுரப்ப்பு அதிகரித்தும் காணப்படுவதால் கருமுட்டை வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படுகிறது. இதனால் கருவுறுதல் பெரும் கேள்விக்குறியாகிறது.

​நீரிழிவு நோய்

பிசிஓஎஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை உண்டாகும். உடலில் இயற்கையாகவே இன்சுலின் ஏற்பான் என்னும் மூலக்கூறு உண்டு. இவை உடலில் இருக்கும் செல்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை தேவையான அளவு பெற்றுகொள்ள உதவி செய்கிறது. இந்த இன்சுலின் ஏற்பானை செல்கள் ஏற்க மறுக்கும் போது கணையமானது செல்கள் குளுக்கோஸை பெற்றுக்கொள்ள இன்சுலின் சுரப்பு இன்னும் தேவை என்று நினைக்கிறது. ஆனால் குளுக்கோஸ் செல்களுக்கு போகாத நிலையில் ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புகள் பெருமளவு உள்ளது.

​இதய கோளாறுகள்

பொதுவாக மாரடைப்பு என்பது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிகம் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கும் போது ரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கிறது. இதனால் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து இதயத்தில் அடைப்பை உண்டாக்குகிறது. இதனால் இதயக்கோளாறுகள், பக்கவாதம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உண்டு. ஆனால் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. முறையான சிகிசையும் உடன் கொழுப்பு குறைந்த உணவுகள், உடற்பயிற்சிகளை கடைப்பிடித்தால் இப்பிரச்சனை வராமல் காத்துகொள்ளலாம்.

​உயர் இரத்த அழுத்தம்

அதிக அளவு எடை அதிகரிப்பதால் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ரத்தத்தில் கொழுப்புகள், ட்ரை கிளிசரைடுகள் உயர்வு போன்றவற்றால் வளர்சிதை மாற்றத்திலும் சிக்கல்கள் உருவாகிறது. உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதய கோளாறுகள் மற்றும் பக்கவாதத்துக்கும் இவை தூண்டுதலாக இருக்கிறது.

​தூக்கத்தில் மூச்சுத்திணறல்

அறிகுறிகள் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு தூங்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் இதை அவர்களால் உணரமுடியாது என்றாலும் அருகில் இருப்பவர்களால் எளிதாக உணரமுடியும்.


ஆழ்ந்து தூங்கும் போது மூச்சுவிடுதலில் மாற்றங்கள் இருக்கும். சீராக மூச்சு இல்லாமல் இடைவெளி விட்டு மூச்சுவிடுவார்கள். திடீரென்று மூச்சு விடுவது நிற்கும். பிறகு திடீரென்று மூச்சு விடுவார்கள். உடல் பருமனால் உண்டாககூடிய பாதிப்புகளில் இவையும் ஒன்று.


கல்யாணத்துக்கு அப்புறம் பீரியட்ஸ் டைம்ல வர்ற இந்த அறிகுறி அலட்சியப்படுத்த கூடாது, என்னன்னு தெரிஞ்சுக்கங்க!


எனினும் இந்த அறிகுறிகளை கண்டு முறையாக சிகிச்சை எடுத்துகொண்டால் முதலில் உடல் பருமனை குறைக்க சிகிச்சை அளிக்கப்படும். அதை தொடர்ந்து ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளில் ஆலோசனை வழங்கப்படும் இவை இரண்டும் இணைந்து உடல் பருமனை குறைத்தால் மேற்கண்ட பிரச்சனைகள் வராமல் தடுத்துவிட முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்