ஆப்நகரம்

பச்சை கீரை அளவுக்கு சிவப்பு கீரையில் சத்துக்கள் இருக்கா... சாப்பிட்டா என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...

நீங்கள் சிவப்பு கீரை சாப்பிட வேண்டும் என நினைகிறீர்களா? அப்படியானால் அதை பற்றி சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். உடல்நலத்தின் மீது கவனம் கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். இதற்காக பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவுகளை நாம் உண்ண நினைக்கிறோம். அது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நன்மையை செய்யும் என நம்புகிறோம்.

Samayam Tamil 7 May 2021, 1:15 pm
சிவப்பு கீரையானது ஒரு பல்துறை காய்கறியாகும். இது பலரால் விரும்பப்படும் கீரையாக உள்ளது. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் கீரைகளை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.
Samayam Tamil red spinach health benefits in tamil
பச்சை கீரை அளவுக்கு சிவப்பு கீரையில் சத்துக்கள் இருக்கா... சாப்பிட்டா என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...


உங்கள் குழந்தைக்கு சிவப்பு கீரையை சுவையான வழியில் உணவாக கொடுக்கும் வழிகளை நீங்கள் கண்டறியும்போது அது அவர்களுக்கு பலவிதமாக பலனளிக்கிறது. இந்த இலை காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதன் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.

​செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது

நம்மில் பெரும்பாலானோர் உட்கார்ந்த நிலையிலான ஒரு வாழ்க்கை முறையை வாழ்கிறோம். இவை உங்கள் கொழுப்பின் அளவையும் எடையையும் அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் உங்கள் செரிமான அமைப்பிற்கும் நன்மை பயக்கின்றன.

உங்களுக்கு தொடர்ந்து மல சிக்கல் இருக்கும்பட்சத்தில் நீங்கள் சிவப்பு கீரையை உண்பது உங்களுக்கு பலனளிக்கும். ஏனெனில் இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்திற்கும் இது கணிசமான அளவில் பயனளிக்கிறது. இதனால் உங்கள் வயிறு பகுதியானது ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.

​எடை இழப்பிற்கு உதவுகிறது

எடை அதிகரிக்க பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பரம்பரை பரம்பரையாகவே உடல் பருமன் என்பது இருக்கலாம். ஆனால் பலருக்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக இருக்கிறதாம். நீங்கள் நிறைய ஃபைபர் சாப்பிடுகிறீர்கள் என்றால் நீங்கள் தவறாமல் வேலை செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

இதனுடன் உங்கள் உணவில் சிவப்பு கீரை போன்ற உணவுகளையும் சேர்க்கவும். ஏனெனில் இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவக்கூடிய அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவற்றில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அடங்கும். இவை அனைத்தும் உங்கள் இன்சுலின் அளவை குறைப்பதற்கும் எடையை குறைப்பதற்கும் உதவுகின்றன.

​எலும்புகளை பலப்படுத்துகிறது

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உங்கள் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது முக்கியமாகும். அவையே உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் எடையையும் தாங்குகின்றன. மேலும் நமது உடலின் இடப்பெயர்ச்சிக்கும் எலும்புகளே அதிகமாக உதவுகின்றன.

எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவையாக கால்சியம் உள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் அதிகமாக இருப்பதாக அறியப்பட்டாலும் சிவப்பு கீரையிலும் கணிசமான அளவில் கால்சியம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் கே உள்ளது. இது பொதுவாக எலும்பு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.

சிவப்பு கீரை எலும்புகளை வலிமையாக்கி எலும்பு முறிவு ஏற்படாமல் வைத்திருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது.

​இரத்த சோகையை குணமாக்குகிறது.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதன் பொருள் என்னவென்றால் அவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களானது சரியான எண்ணிக்கையில் இல்லை. மாதாந்திர மாதவிடாய் பிரச்சனை காரணமாக அவர்களுக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இரும்பு சத்தை சேர்த்துக்கொள்வது முக்கியமாகும். அப்படியாக இரும்பு சத்தை வழங்க கூடிய ஒரு விஷயமாக சிவப்பு கீரை உள்ளது. இது ஹீமோக்குளோபின் அளவை மேம்படுத்தவும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது.

எனவே பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சிவப்பு கீரையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்