ஆப்நகரம்

சருமத்தை பொலிவிழக்கச் செய்யும் செல்ஃபி மோகம்!

அளவுக்கு அதிகமாக செல்ஃபி எடுக்கும் பழக்கமுடையவர்களின் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக தோல்நோய் மருத்துவர்கள் தெரிக்கின்றனர்.

TNN 2 Dec 2016, 4:11 pm
அளவுக்கு அதிகமாக செல்ஃபி எடுக்கும் பழக்கமுடையவர்களின் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக தோல்நோய் மருத்துவர்கள் தெரிக்கின்றனர்.
Samayam Tamil selfies can age the skin and cause wrinkles warn dermatologists
சருமத்தை பொலிவிழக்கச் செய்யும் செல்ஃபி மோகம்!


ஸ்மார்ட் போனின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை எழுவது முதல் இரவு உறங்கும் வரை ஒவ்வொரு அசைவுகளையும் செல்ஃபி எடுத்து அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மூலம் செல்ஃபி எடுப்பதினால் அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் விரைவிலேயே முகச்சுருக்கம், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முதிர்வான தோற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக மருத்துவரை சந்திக்கும் நோயாளிகள் எந்தக் கையில் போனை வைத்து செல்ஃபி எடுக்கிறார்கள் என்பது முகத்தை வைத்தே கூற முடியும். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்தும் கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து இங்கிலாந்து நாட்டின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவர் சைமன் ஜோவாகி கூறுகையில்,'அதிகமாக செல்ஃபி எடுப்பவர்களும், பிளாகில் உள்ளவர்களும் கவலைப்படவேண்டும், ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் புளூடூத் கதிர்வீச்சுக்கூட உடலை பாதிக்கும் தன்மை கொண்டது. போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. அதனால் விரைவில் தோல் வயதானவர்களுக்கு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். மேலும் சுருக்கங்களை அதிகரித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்