ஆப்நகரம்

டெங்கு வந்துட்டு போன பிறகும் என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்...

டெங்கு மிக ஆபத்தான நோயாகக் கருதப்பட்டது. டெங்குவில் இருந்து குணமடைந்த பிறகும் நீடிக்கும் சில பக்க விளைவுகள் குறித்து நாம் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

Samayam Tamil 31 Aug 2020, 12:42 pm
கொசுவும் மழைக்காலமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. மழைக்காலம் தொடங்கினால் கொசு வரவு எண்ணிக்கை அதிகரிக்கும். வெப்பமான மற்றும் ஈரப்பதம் மிகுந்த வெப்பநிலை இரத்தம் குடிக்கும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த காலகட்டமாகும். இந்த கொசுக்கள் கொடிய டெங்கு நோய் உருவாகக் காரணமாக இருக்கின்றன. அதுகுறித்து நாம் மேலும அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samayam Tamil side effects of dengue that may last for a while after recovery in tamil
டெங்கு வந்துட்டு போன பிறகும் என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்...


​டெங்குவின் பொதுவான பக்க விளைவுகள்

எலும்புகளை உடைக்கும் காய்ச்சல் என்று அறியப்படும் டெங்கு நான்கு வெல்வேறு வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது மற்றும் ஏடிஸ் இன பெண் கொசுவால் பரவுகிறது. டெங்குவிற்கான பொதுவான அறிகுறிகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

​டெங்குவின் அறிகுறிகள் :

தசை வலி

எலும்பு மற்றும் மூட்டு வலி

தடிப்புகள்

தீவிர காய்ச்சல்

தலைவலி

வாந்தி, குமட்டல்

போன்றவையாகும்.

இந்த அறிகுறிகள் மிதமானது முதல் தீவிரமாகவும் இருக்கலாம். டெங்குவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகும், அந்த பாதிப்பால் உண்டான சில பக்க விளைவுகள் உடலில் இன்னும் சில காலம் நீடிக்கின்றன. இதுவே உண்மை.

வைட்டமின் சி அதிகமா சாப்பிட்டால் என்ன ஆகும்? எந்த அளவு தான் சாப்பிட வேண்டும்?

சிகிச்சை

டெங்குவிற்கான சிகிச்சையில் எந்த ஒரு தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. டெங்குவால் பாதிக்கப்பட்டவர் அதிக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைக்கலாம். இதனால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வாந்தி தடுக்கப்படும். தீவிர காய்ச்சல் நிலையும் சற்று குறையும் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த நோயின் காரணமாக உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறையக்கூடும், இதன் காரணமாக இந்த பாதிப்பில் இருந்து வெளிவந்த பிறகும் பூரண குணமடைய சற்று கால தாமதமாகும். இனி டெங்குவின் பக்க விளைவுகள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

​மனஅழுத்தம் மற்றும் பதற்றம் :

டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது , பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்ற அறிகுறிகளை அதிகமாக அனுபவிப்பார்கள். உளவியல் ரீதியான சில பாதிப்புகள் அவர்களை ஆட்கொள்ள நேரும். இதனை கையாள்வது சற்று கடினமாக இருக்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் என்ன சாப்பிடணும்?... என்ன சாப்பிடக்கூடாது?...

​முடி உதிர்வு :

டெங்குவில் இருந்து மீண்டவர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்படும்1 ஒரு பொதுவான அறிகுறி முடி உதிர்வு. டெங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த பிறகு அடுத்த 1-2 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு பாதிப்பு தொடரலாம். டெங்கு பாதிக்கப்பட்ட சில நபர்கள் ஆண் முறை வழுக்கை என்னும் அலோபீசியா நோயால் பாதிக்கப்படலாம். தலையின் ஒரு சில பகுதியில் மட்டும் முடி உதிர்ந்து வழுக்கை காணப்படலாம். மருந்துகள், வளர்சிதை மாற்றம், ஹார்மோன் அழுத்தம் , தீவிர தொற்று பாதிப்பு போன்றவற்றின் காரணமாக இது நிகழக்கூடும்.

​நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் பலவீனம் :

நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு தீவிர பாதிப்பை டெங்கு உண்டாக்குகிறது. அதனால் டெங்குவில் இருந்து குணமடைந்த பின்னும், அவ்வப்போது சாதாரண காய்ச்சல் ஏற்படலாம். டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த பின்னரும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்வார்கள். சமச்சீர் உணவு உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற பழக்கங்களை மேற்கொள்வதால் இந்த நிலையில் இருந்து விரைந்து மீண்டு வர முடியும்.

எடையை குறைக்கணும்னு நினைக்கறவங்க சாப்பிட வேண்டிய பருப்பு எது?... ஏன்... தெரிஞ்சிக்கங்க...

​மூட்டு வலி :

தசை , எலும்பு மற்றும் மூட்டு வலி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறியாகும். ஆனால் சில நேரங்களில் குணமடைந்த பிறகும் இந்த வலிகள் உடனடியாக குறைவதில்லை. இது பாலிஆர்த்ரால்ஜியா (பல மூட்டு வலி) மற்றும் மயால்ஜியா (தசை வலி) என குறிப்பிடப்படுகிறது, இது டெங்குவில் இருந்து மீண்ட பிறகும் பல நாட்கள் நீடிக்கும். மேலும், வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடு இந்த நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.

​ஊட்டசத்து குறைபாடு

டெங்கு வைரஸ் காரணமாக வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்களில் குறைபாடு தோன்றலாம். இதனால் உங்கள் வலி மேலும் மோசமடையலாம். ஆகவே இதில் இருந்து விரைந்து குணமடைய, சமச்சீர் உணவுடன் கூடிய முழு ஊட்டச்சத்துகளை உட்கொள்வது அவசியம். வைட்டமின் பி 12 , டி மற்றும் ஈ போன்ற சத்துகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படலாம்.

மழைக்காலங்களில் உணவில் புளி சேர்த்து சாப்பிடலாமா? ஏன் கூடாது...

​முன்னெச்சரிக்கை

டெங்குவிற்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவுடன் , அந்த நபர்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்து அதிக கவனமாக இருப்பது அவசியம். டெங்கு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் சில உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

திரவ உணவுகள் அதிகம் உட்கொள்ளலாம். ஓ ஆர் எஸ் கரைசல், கரும்பு ஜூஸ் , இளநீர், எலுமிச்சை ஜூஸ் , ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றை அவ்வப்போது பருகலாம். உடலை நீர்ச்சத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியம்.

பால் பொருட்கள் , முட்டை, சிக்கன், மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்படுகிறது.

டெங்குவில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் காரமான மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மாதுளை பழம் உட்கொள்வதால் உடலில் இரத்த அளவு அதிகரிக்கும் என்பதால் டெங்கு நோயாளிகள் மாதுளை பழம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்