ஆப்நகரம்

லாக்டவுன் நேரத்துல ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் அஞ்சறைப் பெட்டி பொருள்கள்...

உங்க வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களைக் கொண்டே உங்க ஜீரண பிரச்சினைகளை போக்க முடியும். இஞ்சி, ஆப்பிள் சிடார் வினிகர் போன்ற பொருட்கள் உங்க வயிற்று வீக்கம், வாயுத் தொல்லை போன்றவற்றை போக்க உதவுகிறது.

Samayam Tamil 28 May 2021, 5:45 pm
இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் அதிகப்படியான நொறுக்கு தீனிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் என தங்கள் நேரத்தை போக்க எடுத்துக் கொண்டு வருகின்றனர். இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை நாடுவது அவர்களுக்கு செரிமான சிக்கல்களை உண்டாக்குகிறது. இப்படி ஏற்படும் சின்ன சின்ன செரிமான சிக்கல்களுக்காக தொற்று காலத்தில் நாம் மருத்துவமனையை நாட இயலாது.எனவே வீட்டில் இருக்கும் சில சமையலறை பொருட்களைக் கொண்டே உங்க செரிமான சிக்கல்களை போக்க முடியும்.
Samayam Tamil simple kitchen ingredients to fix digestive problems during the lockdown
லாக்டவுன் நேரத்துல ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும் அஞ்சறைப் பெட்டி பொருள்கள்...


​அஜீரணக் கோளாறு

அஜீரணம் என்பது மக்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகளுள் ஒன்றாக உள்ளது. செரிமான பிரச்சினைகள் ஏற்படும் ஒவ்வொரு சமயத்திலும் மாத்திரைகள் எடுப்பது உங்களுக்கு நல்ல யோசனையாக இருக்காது. எனவே இதற்கு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பது நல்லது என கூறப்படுகிறது. அப்படி எந்தெந்த பொருட்கள் உங்க சீரண பிரச்சினைகளை போக்கும் என அறிந்து கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் இஞ்சிரோல் போன்ற பொருட்கள் காணப்படுகின்றன. இது அஜீரணம் மற்றும் குமட்டலை போக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள பினோலிக் அமிலம் இரைப்பை சுருக்கங்களை குறைத்து இரைப்பை குடல் எரிச்சலை போக்குகிறது. இது உங்க வயிற்று வீக்கத்தை குறைக்கிறது. எனவே உங்க அஜீரணம் நீங்க ஒரு கப் இஞ்சி டீ குடித்து வாருங்கள். ஒரு டீ ஸ்பூன் ப்ரஷ் இஞ்சி அல்லது உலர்ந்த இஞ்சியில் சிறுதளவு கல் உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து குடிக்கும் போது அது வயிற்று மந்தத்தை போக்க உதவி செய்யும். இந்த டீயை உணவிற்கு முன்பு எடுத்து வாருங்கள். இது உங்க உணவு நல்ல செரிமான அடைய உதவி செய்யும்.

​ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகரில் மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இதர மினரல்கள் காணப்படுகிறது. இதுவும் உங்க சீரணத்திற்கு உதவி செய்யும். இந்த பானம் அஜீரணம், வாயு மற்றும் வயிற்று வீக்கத்தை போக்க உதவுகிறது.

ஆப்பிள் சிடார் வினிகர் செரிமான சாற்றை தூண்டி மலச்சிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது. இது இயற்கையாகவே அசிட்டிக் என்பதால் கொழுப்பை உடைக்கவும் நெஞ்செரிச்சலை போக்கவும் உதவுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று வீக்கம் மற்றும் வாயுத் தொல்லையை போக்குகிறது. வெதுவெதுப்பான நீரில் வினிகர் சேர்த்து சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வாருங்கள். நன்மை கிடைக்கும்.

​கெமோமில் டீ

கெமோமில் டீ பல நூற்றாண்டுகளாக இயற்கையாக பயன்படுத்தி வரும் டீயாகும். இது சீரணமின்மை, தூக்கமின்மை மற்றும் அனிஸிட்டி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. வயிற்று அசெளகரியம், சீரணமின்மையை சரி செய்தல், வயிற்றுப் பாதையில் வயிற்று அமிலம் காணப்படுவது போன்றவற்றை போக்க உதவுகிறது. இது எரிச்சலுடன் கூடிய குடல் நோய்க்குறியை போக்க உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வயிற்று வலியை போக்க உதவி செய்யும்.

கெமோமில் பூக்களை பறித்து அதை ஒரு டீ பாத்திரத்தில் போட்டு சூடான நீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அந்த பாத்திரத்தை மூடி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடியுங்கள். சுவையான கெமோமில் டீ ரெடி.

​பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா எளிதில் கிடைக்கக் கூடிய சமையலறை பொருளாகும். இது உங்க குடல் ஆரோக்கியம் மற்றும் வயிற்று கொழுப்பை கரைக்க உதவுகிறது. 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவை 8 அவுன்ஸ் தண்ணீரில் கலந்து காலையில் எழுந்ததும் நன்றாக கலக்குங்கள். இது உங்க அமில கார சமநிலையை பராமரிக்கிறது. இது உங்க சீரணத்திற்கும், வயிற்று அமிலத்தை நடுநிலை ஆக்கவும், சீரணமின்மை பிரச்சினையில் இருந்து விடுபடவும், வயிற்று வீக்கம் மற்றும் வாயுவை போக்கவும் உதவி செய்கிறது.

​ஓம விதைகள்

ஓம விதைகள் செரிமான ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும். இது பல்வேறு செரிமான சிக்கல்களை போக்க பயன்படுகிறது. ஓம விதைகளில் உள்ள தைமல் என்ற ரசாயன கலவை செரிமானத்தை மேம்படுத்தவும், வாயுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், மலச்சிக்கலை நீக்குவதற்கும், இரைப்பை சாறுகளை சுரக்கவும் உதவுகிறது.

ஓம பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். இந்த தண்ணீர் உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் சீரகம், 1 டீ ஸ்பூன் ஓம விதைகள், 1/2 டீ ஸ்பூன் இஞ்சி தூள் சேர்த்து குடிக்கவும். இது உங்க நெஞ்செரிச்சலை குணமாக்க உதவி செய்யும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்