ஆப்நகரம்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகிய சவுமியா சுவாமிநாதன்

இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Samayam Tamil 8 Mar 2019, 7:38 am
இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
Samayam Tamil soumiya swaminathan


1960-களில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டது. ‘இந்தியர்களால் உணவு உற்பத்தி செய்ய முடியாது. பசியால் கொத்துக் கொத்தாக உயிரிழப்பார்கள்’ என்று பல நாடுகள் கூறின. இதை பொறுத்துக்கொள்ள முடியாத எம்.எஸ். சுவாமிநாதன், ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதிக உற்பத்தியையும், 200 சதவீத லாபத்தையும் சாதித்துக் காட்டினார். இதை ‘கோதுமைப் புரட்சி’ என்று பாராட்டினார் பிரதமர் இந்திரா காந்தி.

சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெறவைத்தார். நாட்டின் முதுகெலும்பான வேளாண் துறையில் அபரிமித வளர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்தார்.

தற்போது உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், எம்.எஸ். சுவாமிநாதனின் மகளுமான சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து சவுமியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்