ஆப்நகரம்

பாசிப்பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டா எடை குறையுமா? கூடுமா?... உண்மை என்ன...

முளை கட்டிய பச்சை பயிறு மிகவும் ஆரோக்கியமானது. முளை கட்டிய பச்சை எடை இழப்புக்கு பெரிதும் உதவும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு ஆகும். செரிமான பிரச்சனை இருந்தால், உங்களுக்கு இந்த கட்டுரை நிச்சயமாக உதவும். இந்த உணவு எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் உதவுகின்றன.

Samayam Tamil 20 Oct 2021, 10:29 am
இது ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் மற்றும் தேவையற்ற பசி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஒரு சிறந்த வழி. ஆனால் சில நேரங்களில், பயிரை முளைக்க வைக்கும் செயல்முறை எளிதானது என்றாலும், சரியாக சில நேரங்களில் முளை கட்டாது. உங்களுக்கும் இதே அனுபவம் இருந்தால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்! உங்களுக்கு இந்த கட்டுரை நிச்சயமாக உதவும்.
Samayam Tamil sprouted moong dal for weight loss and digestion
பாசிப்பயறை முளைகட்ட வைத்து சாப்பிட்டா எடை குறையுமா? கூடுமா?... உண்மை என்ன...


​ஊட்டச்சத்துக்கள்

பயிறில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதுல் ஆக்ஸிஜனேற்ற ஆற்றல் நிறைந்துள்ளது. பயிரை முளைக்க வைக்கும் செயல்முறை எளிதானது. மேலும் இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. முளை கட்டிய பச்சை பயிறில் நார், வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், கார்போஹைட்ரேட்டுகள், ஃபோலேட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. மேலும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடை இழப்புக்கு உதவவுகிறது.

தலைமுடி ரொம்ப வறண்டு போகுதா?... இந்த 4 விஷயத்தை மட்டும் செய்ங்க... அப்புறம் மின்னும்...

​செய்முறை

பச்சை பயிரை நன்றாக தண்ணீரில் கழுவவும்.

அவற்றை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு மூடி அல்லது தட்டு போட்டு மூடி வைக்கவும்.

அவற்றை சூடாக இருக்கும் இடத்தில் வைக்கவும்.

முளைகட்டிய பச்சை பயிறை சாலட் உட்பட பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம். குஜராத்திய மக்கள் காலை உணவிற்கு காக்ராவுடன் இதை சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

இந்த உணவு எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் உதவுகின்றன. கொலஸ்ட்ரால் அளவு, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

கண்ணுக்குக்கீழே சுருக்கம் விழுந்து ரொம்ப அசிங்கமா இருக்கா... அப்போ இந்த 6 பேஸ்பேக்கும் உங்களுக்குத்தான்...

​முளை கட்டிய பச்சை பயிறின் பயன்கள்

செரிமான ஆற்றல் கொண்டது

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகரிக்கிறது.

அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது.

கொழுப்பைக் குறைக்கிறது.

உடலை சுத்தம் செய்ய உதவுகிறது.

மேலும் இந்த முளை கட்டிய பயிறை முதலில் வேக வைத்து பின்னர் சமைக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்