ஆப்நகரம்

செலவே இல்லாமல் உடலை ஸ்லிம்மாகலாம்; இதமட்டும் பண்ணுங்க போதும்; சூப்பர் டிப்ஸ்!

உடல் எடையை செலவின்றி குறைத்து, ஆரோக்கிய வாழ்வின் வழிமுறைகளை இங்கே காணலாம்.

TNN 17 Nov 2017, 3:50 pm
இன்று நம்மில் பலபேருக்கு இருக்கும் தொந்தரவு உடல் பருமன். இது பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக அமைவது குறிப்பிடத்தக்கது. இதற்கு பணம் செலவிட்டு மருந்துகள் வாங்கி உட்கொள்வது, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது என பலவழிகளைக் கையாள்வர்.
Samayam Tamil steps to fit the body without any cost
செலவே இல்லாமல் உடலை ஸ்லிம்மாகலாம்; இதமட்டும் பண்ணுங்க போதும்; சூப்பர் டிப்ஸ்!


ஆனால் வீட்டிலேயே செய்யக் கூடிய செலவே இல்லாத முறை ஒன்று உள்ளது. அதன் மூலம் உங்கள் உடல் எடை குறைந்து, ஸ்லிம்மாக எப்போதும் வைத்திருக்கலாம். இது உடற்பயிற்சி வகையைச் சேர்ந்தது.

வழிமுறைகள் - பலன்கள்

* நாள்தோறும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால், தேவையற்ற கொழுப்புகள் கரையும். தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.

* உடலின் உள் உறுப்புகள், நரம்புகள் தக்க பயிற்சி கிடைப்பதன் மூலம் சீராக செயல்படுகின்றன. கவலை, மன அழுத்தம், நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்குகின்றன.

* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது. ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.

* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக வலுப் பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி பாதிப்புகள் நீங்கும். முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறும். இரத்த ஓட்டம் சீராகும்.

Steps to fit the body without any cost.

அடுத்த செய்தி

டிரெண்டிங்