ஆப்நகரம்

summer heat : ஜீரண சக்தியை பாதிக்கும் கோடை வெப்பம்... எப்படி தடுக்கலாம்...

ஜீரண ஆற்றலும் ஜீரண மண்டலும் தான் நம்முடைய உடலின் இயக்கத்திற்கான அடிப்படையான ஒரு செயல்பாடு இது கோடை வெப்பத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்

Authored byமணிமேகலை | Samayam Tamil 7 Jun 2023, 11:22 am
நம்முடைய ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு ஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. கடினமான கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்வது, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது துரித உணவுகள், சரியான தூக்கம் இன்மை, மன அழுத்தம் இப்படி ஏராளமான காரணிகள் நம்முடைய ஜீரண ஆற்றலை பாதிக்கும். அதற்கு கோடைகாலத்தில் நிலவுகின்ற அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்த அதிகப்படியான வெப்பநிலை எப்படி நம்முடைய வயிறை, ஜீரண மண்டலத்தைப் பாதிக்கிறது என்பது குறித்து நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாங்க தெரிஞ்சுப்போம்
Samayam Tamil summer heat affects digestive health how to prevent
summer heat : ஜீரண சக்தியை பாதிக்கும் கோடை வெப்பம்... எப்படி தடுக்கலாம்...


​வயிற்றுக் கோளாறு மற்றும் உணவு

கடந்த 20 ஆண்டுகளாக பெரும்பாலானவர்கள் அடிக்கடி அசிடிட்டி வாயு தொல்லை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் நம்முடைய உணவு முறை.

அதிக அளவு சர்க்கரை, எண்ணெய் மற்றும் வகை உணவுகளை எடுத்துக் கொள்வது வாய்வுத் தொல்லை உள்ளிட்ட நோய்களை நம்முடைய உடலில் உற்பத்தி செய்யும் என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

​கெட்ட கொழுப்பு கரைய

​பருவ கால மாற்றங்கள்

இந்த ஆய்வில் அசிடிட்டி வாய்வு தொல்லை, அஜீரணக் கோளாறு ஆகிய மூன்றும் தான் மிக அதிக அளவில் உலக அளவில் ஏற்படும் ஜீரணக் கோளாறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை வெறும் உணவால் மட்டுமே ஏற்படுவது கிடையாது. திடீரென நிகழும் பருவ கால மாற்றங்களும் இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன.

​வாயுத்தொல்லை நோய்களில் காணப்படும் பொதுவான அறிகுறிகள்

வயிற்றில் வாயு பெருக்கம் மற்றும் வாயு தொல்லை காரணமாக ஏதேனும் நோய்கள் இருந்தால் அவற்றிற்கு கீழ்வரும் அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.

அஜீரணக் கோளாறு,
பசியின்மை,
தலைவலி,
மார்பு பகுதிகளில் வலியும் அழுத்தமும் அதிகரித்தல்,
குமட்டல் மற்றும் வாந்தி,
உடல் சோர்வு,
தலைசுற்றல் அவற்றோடு கூடிய வயிற்று வலி ,
இந்த அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் வாயு தொடர்பான நோய்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்

​வாயு தொல்லை தொடர்பான நோய்கள் உண்டாக காரணங்கள்

பொதுவாக வாய்வுத் தொல்லை இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது.

மேல் வயிற்றுப் பகுதியில் வாய்வு தங்குவதற்கு -

வாய் வழியே வாயுக்களை விழுங்குவது,
தண்ணீர் குடிக்கும்போது உணவு உண்ணும் போது விழுங்குவது,
புகைபிடிக்கும் போது உள்ளிழுக்கும் வாயு,
பபிள்கம் மெல்லும் போது வாயுக்களை விழுங்குவது,
விரதங்கள் இருப்பது
குறிப்பாக ஸ்ட்ரா வைத்து திரவ உணவுகளை குடிப்பது ஆகிய காரணங்களால் இந்த மேல் வயிற்று வாயு உண்டாகிறது

கீழ் வயிற்றில் வாய்வு பெருக்கம் ஏற்படுவதற்கு - மிக முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் காரணமாக அமைகின்றன. குறிப்பாக,

பழங்களில் - பீச், ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்கள்,
காய்கறிகளில் - முட்டைக்கோஸ், வெங்காயம், பீன்ஸ், அஸ்பாரகஸ் போன்ற காய்கறிகளும் ,
ஸ்டார்ச் உணவுகளான- மக்காச்சோளம், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்வது,
அதிக கொழுப்பு உணவுகள் மற்றும் அதிக கார உணவுகள்,
ஆகியவையும் இந்த கீழ் வயிற்று வாய்ப்பு இருக்கும் உண்டாவதற்கு காரணங்களாக அமைகின்றன

இவற்றைத் தாண்டி அசிடிட்டி வயிற்றுப்புண் லாக்டோஸ் சகிப்புத்தன்மை மலக்குடல் அலர்ஜி சீலியாக் நோய்கள் கிரான் நோய்கள் ஆகியவையும் காரணமாக அமைகின்றன

​எப்படி சரி செய்யலாம்?

அதிகப்படியான உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் மேற்கண்ட பிரச்சினைகளும் அவற்றைக் காரணிகளாக கொண்டு உருவாகும் ஜீரணக் கோளாறுகளையும் மருத்துவ ரீதியாக சரி செய்ய முடியும். அதற்கு மருத்துவர்கள் சில மருந்து வகைகளை பரிந்துரைப்பார்கள். அதைத்தாண்டி சில உணவு முறை, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களாலும் இவற்றை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சிலருக்கு தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிறு சிறு உணவின் காரணமாக வாயு தொல்லை ஏற்படும். அதை அவ்வப்போது மிக எளிதாக சரி செய்து விட முடியும். ஆனால் தொடர்ச்சியாக அடிக்கடி ஒருவருக்கு இந்த வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றால் அவர் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

​வாழ்க்கை முறை மாற்றங்கள்

உணவில் ப்ரோ - பயாட்டிக் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த முடியும்.

ஆன்டாசிட் வழி நிவாரணிகளும் சில சமயங்களில் வயிற்றுக் கோளாறுகளுக்கு தீர்வை கொடுக்கலாம்.

வாயுக்களை உற்பத்தி செய்யும் பானங்கள் குறிப்பாக ஆல்கஹால், கொழுப்பு நிறைந்த உணவுகள், அஸ்பிரின் மருந்துகள், காரமான உணவுகள், வலி நிவாரணிகள் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும் வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது மிக அவசியம்

உணவுகளை சிறுசிறு அளவில் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் நிறைய உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அது சரியாக ஜீரணிக்காமல் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை தூண்டும்.
இவை எல்லாவற்றையும் விட இந்த வெப்பத்திலிருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்