ஆப்நகரம்

வைட்டமின் சத்தை பெறுவதற்கு மாத்திரைகள் உதவாதாம். மாறாக இதை தான் செய்யணும்.. ஆய்வு சொல்வது இதுதான்!

நமக்கு ஒரு வைட்டமின் பற்றாக்குறை என்றால் உடனே மருத்துவரை அணுகி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். அப்படி எடுத்து கொள்வது உண்மையில் பலனளிக்குமா என்பதை இப்போது பார்க்கலாம்.



Samayam Tamil 14 Jul 2022, 12:18 pm
நாம் சாப்பிடும் அன்றாட உணவில் இருந்து நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெறுவது உண்டு. அந்த அளவிற்கு வைட்டமின்களின் தேவை அவசியமாகிறது. எனினும் அவ்வளவு வைட்டமின் தேவையா ? வைட்டமின் மாத்திரைகள் குறித்து ஆய்வுகள் சொல்லும் உண்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
Samayam Tamil the untold truth about vitamins and their effectiveness
வைட்டமின் சத்தை பெறுவதற்கு மாத்திரைகள் உதவாதாம். மாறாக இதை தான் செய்யணும்.. ஆய்வு சொல்வது இதுதான்!




​வைட்டமின் மாத்திரைகள்

உடலில் வைட்டமின் பற்றாகுறை இருந்தால் வைட்டமின் மாத்திரைகள் எடுப்பது வழக்கம். இந்த மாத்திரைகள் உண்மையில் உடலுக்கு நன்மை பயக்கிறதா? இது குறித்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பிறகு ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் மாத்திரைகள் தேவையில்லை என்பது தெரிய வந்துள்ளது.


உண்மையில் வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது என்றைக்குமே நோயை தடுக்காது. அதிகளவில் வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது உங்களுக்கு தீங்கைத் தான் விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


தினமும் எவ்வளவு நார்ச்சத்து தேவை.. எதிலெல்லாம் இருக்கும்.. நன்மைகள் என்னென்ன.. முழுமையா தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்க!


அதிலும் ஒரு ஆரோக்கியமான நபர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வைட்டமின் மாத்திரைகளை எடுப்பது முற்றிலும் தவறு. இது நாள்பட்ட நோய்க்கு வழி வகுக்கும். இந்த கட்டுரையில் வைட்டமின் மாத்திரைகளை பற்றி இதுவரை அறிந்திராத விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

​வைட்டமின்கள் தேவையான அளவு

நீங்கள் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களின் ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், உங்கள் உடலுக்குத் தேவையான தினசரி வைட்டமின்களின் அளவு கிடைக்கப் பெறும். இந்நிலையில் நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று இது போக நீங்கள் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் தினசரி வைட்டமின் அளவை விட கூடுதலாக பெற நேரிடலாம்.


நாள்தோறும் ஏதேனும் பழங்களையும் உட்கொண்டு விட்டு கூடுதலாக இந்த வைட்டமின் மாத்திரைகளையும் நீங்கள் எடுத்துக் கொண்டால் சிக்கல் தான் ஏற்படும் என்று தேசிய சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

​வைட்டமின் மாத்திரைகள் புற்றுநோய் அபாயத்தை உண்டு செய்யும்

நேஷனல் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் ஹெல்த்தின் 4,00,000 க்கும் அதிகமான மக்க ளைப் பற்றிய ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வு படி தினசரி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது அதிக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளது. பெண்களைப் பற்றிய ஒரு தனி ஆய்வில், தினசரி மாத்திரைகள் சாப்பிடுவது தோல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் சி ஜலதோஷத்தை குணப்படுத்தாது

பொதுவாக நாம் அனைவரும் வைட்டமின் சி ஜலதோஷத்தை குணப்படுத்தும் என்று தான் இதுவரை நினைத்து வந்தோம். ஆனால் உண்மையில் வைட்டமின் சி மாத்திரைகள் சலதோஷத்தை குணப்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.


உடம்புல கிரியேட்டினைன் அளவு அதிகமா இருந்தா கிட்னி பாதிக்குமே.. என்ன சாப்பிட்டா கட்டுப்பாடா இருக்கும்!


15 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகள் வைட்டமின் சி ஜலதோஷத்தை குணப்படுத்தாது என்கிறது. இதுவரை இவை உதவும் என்பதற்கு நிரூபணமான ஆய்வுகளும் இல்லை.

​வைட்டமின் ஏ கண்களுக்கு நல்லது என்பது பொய்

பொதுவாக கண் பார்வையை மேம்படுத்த எல்லாரும் கேரட்டை சாப்பிட வலியுறுத்துவோம். இதற்கு முக்கிய காரணம் கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ காணப்படுகிறது. இது ஆரோக்கியமான கண்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது .


ஆனால் உண்மையில் வைட்டமின் ஏ மாத்திரைகள் இதே வேலையை செய்வதில்லை. பீட்டா கரோட்டீன்கள் கொண்ட வைட்டமின் ஏ மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 28 % ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே கேரட், இனிப்பு உருளைக்கிழங்கை உட்கொண்டு இயற்கையான வழிகளில் வைட்டமின் ஏ சத்தை பெறுங்கள்.

​கால்சியம் சத்து மாத்திரைகள்

பொதுவாக வளரும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கால்சியம் சத்து அவசியம் என கூறப்படுகிறது. அதனால் உணவில் அதிகளவு பால் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. கால்சியம் தான் நம்முடைய எலும்பு ஆரோக்கியத் திற்கு உதவுகிறது. ஆனால் இதே வேலையை கால்சியம் மாத்திரைகள் செய்வதில்லை என்கிறது ஆராய்ச்சி.


கால்சியம் மாத்திரைகள் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தும் என்பதற்கு எந்த வித அறிவியல் ஆதாரமும் இல்லை. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்கள் தினசரி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.

​உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்

வைட்டமின் மாத்திரைகள் நமக்கு ஆபத்தையே ஏற்படுத்துகிறது. எனவே நாம் என்ன மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை வைட்டமின்களை இயற்கையாக உணவில் இருந்து பெறுவது நல்லது.


meat: சைவ இறைச்சியா..அசைவ இறைச்சியா… உடம்புக்கு எது நல்லது.. ஆய்வு சொல்வது என்ன?


நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் நபராக இருந்தாலோ மருத்துவரின் பரிந்துரை பேரில் மட்டுமே வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்