ஆப்நகரம்

இந்த 5 வகையான ஆட்களை மட்டும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது...

நீங்கள் திருமணத்திற்கு தயாராகும் நபர் என்றால் கீழ்க்கண்ட குணநலன்கள் கொண்ட நபர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்க திருமண வாழ்க்கையில் பலவித கஷ்டங்களை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உறவுகளில் சண்டை, பிரிவு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம்.

Samayam Tamil 25 Oct 2021, 1:42 pm
திருமணம் என்று வரும் போது அதில் ஒருவரின் குணநலன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனெனில் வாழ்க்கை நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உறவில் இறங்க வேண்டியது அவசியம் ஆகிறது. சரியாக ஒருவரைப்பற்றி புரியாமல் உறவுக்குள் இறங்கும் போது திருமணத்திற்கு பிறகான உங்க வாழ்க்கை நரகமாக வாய்ப்பு உள்ளது. நிறைய உறவுகள் திருமணத்திற்கு பிறகு முறிவதற்கு கீழ்க்கண்ட குணநலன்களும் காரணமாக அமைகிறது. எனவே கீழ்க்கண்ட குணநலன்கள் உடைய நபர்களை திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
Samayam Tamil these 5 kind of people you should never get marry
இந்த 5 வகையான ஆட்களை மட்டும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது...


​பொய் உரைப்பவர்

சில சமயங்களில் உங்க துணை உங்களிடம் பொய் உரைக்கலாம். உங்களிடம் ரகசியமாக விஷயங்களை காக்கும் நபரை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் இருந்து பெரிய விஷயங்களை மறைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்க வாழ்க்கையை தலைகீழாக மாற்ற வாய்ப்பு உள்ளது. மறைக்கப்பட்ட பொய் உங்க வாழ்க்கையை பாதிக்கக் கூடும். எனவே ஒருபோதும் பொய் உரைக்காதீர்கள்.

​நயவஞ்சகர்கள்:

ஒரு போதும் நயவஞ்சகர்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அவர்கள் உங்க வாழ்க்கையில் எரிச்சலூட்ட தொடங்கி விடுவார்கள். ஏனெனில் அவர்களின் நயவஞ்சக குணம் உங்க வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கலாம்.

​குற்றம் சாட்டுபவர்:

குற்றம் சாட்டுபவரை காதலிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தை கூட மறக்காமல் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எல்லா தவறும் நீங்கள் தான் செய்தீர்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பார்கள். எனவே குற்றம் சாட்டுபவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

​சுயநலமிக்கவர்கள்

எல்லாம் என்னுடையது என்கிற நபர், எதை எடுத்தாலும் எனக்கு தெரியும், நான் பெரியவன் போன்ற எண்ணம் கொண்ட நபரை திருமணம் செய்யாதீர்கள். எனவே நான், என்னுடையது என்கிற நபர்கள் வேண்டாம்.

​உறுதியற்ற நபர்கள் :

உறுதியற்ற நபர்கள் உங்க உணர்ச்சிகளை வீணாக்க கூடியவர்கள். அவர்கள் உங்களை திருமணம் செய்து கொண்டால் உறுதியாக இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் பிரச்சினை பண்ணிக் கொண்டே இருப்பார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்