ஆப்நகரம்

தைராய்டு குறைபாடா – இந்த டயட் உணவுகளை சாப்பிடுங்க.... ஆரோக்கியமாக முறையில் சரிசெய்யலாம்...

சில எளிய உணவுமுறைகளை மேற்கொள்வதன் மூலம், தைராய்டு குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாம் நிரந்தர தீர்வு பெறலாம். தைராய்டு குறைபாடு காரணமான அசௌகரியங்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், தங்களது உணவுமுறைகளில் சிறிதளவு மாறறங்களை மட்டுமே மேற்கொண்டு சில எளிய முறைகளை பின்பற்றினாலே அவர்கள் அந்த பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

Samayam Tamil 6 Mar 2021, 2:21 pm
நமது கழுத்துப்பகுதியின் முன்பக்கத்தில் கீழிறங்கி அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. இது ஆதாம் ஆப்பிளை போன்று இரண்டு லோப்களை கொண்டதாக உள்ளது. இது சாதாரண நிலையில் இருக்கும்போது, நாம் இதன் பாதிப்பை உணர்வது இல்லை. உடலின் இயக்கத்திற்கு தேவையான முக்கிய ஹார்மோன்களை சுரக்கும் செயலை, இந்த தைராய்டு சுரப்பி மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil thyroid imbalances follow this simple diet in tamil
தைராய்டு குறைபாடா – இந்த டயட் உணவுகளை சாப்பிடுங்க.... ஆரோக்கியமாக முறையில் சரிசெய்யலாம்...


​தைராய்டு சுரப்பிகள்

இந்த தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நாம் தைராய்டு தொடர்பான நோயால் பாதிக்கப்படுகிறோம். தைராய்டு சுரப்பி, அதிகப்படியான ஹார்மோனை சுரந்தால், நாம் ஹைபர்தைராய்டு குறைபாட்டிற்கும், தைராய்டு குறைவாக குறைந்தால், ஹைப்போதைராய்டு குறைபாட்டிற்கும் நாம் உள்ளாகி இருப்போம். இவ்விரண்டு நிலையும், நமது உடலிற்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தி விடுகின்றன. தைராய்டு தொடர்பான பிரச்சினைகள், பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டு வருகின்றன. அதேபோல், வயதுக்கு மேற்பட்டோர் தைராய்டு தொடர்பான பிரச்சினைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.

​தைராய்டு தொடர்பான நோயின் அறிகுறிகள்

கவலை

இன்சோம்னியா, சரியான உறக்கம் இல்லாமை

திடீர் உடல் எடை குறைவு

திடீர் உடல் எடை அதிகரிப்பு

தைராய்டு சுரப்பியில் வீக்கம்

கண் பார்வை குறைபாடு

வெப்ப உணர்திறன்

அசதி / சோர்வு

நினைவுத்திறன் இழத்தல் / மறதி

குளிர் வெப்பநிலை உணர்திறன்

​தைராய்டு குறைபாடை இயற்கையாகவே தீர்க்கும் உணவுமுறை

காலை உணவு : செர்ரி ஸ்மூத்தி, போஹா, ஊத்தப்பம், இட்லி, தயிர்

மதிய உணவு : சாலட், பச்சை காய்கறிகள், டுனா மீன், உருளைக்கிழங்கு சூப், சிக்கன் சூப்

இரவு உணவு : சாலட், சப்பாத்தி மற்றும் பருப்பு, பிரவுன் அரிசி சாதம், காய்கறிகள், கறுப்பு பீன்ஸ்

சிற்றுண்டி : டார்க் சாக்லேட், வெள்ளைப்பூண்டு பிரட், பீனட் பட்டர், வாழைப்பழம்

​நன்மைகள்

இந்த உணவுமுறையை நாம் மேற்கொண்டால், இது தைராய்டு தொடர்பான குறறைபாடுகளை மட்டும் களைவதோடு மட்டுமல்லாது, உடலின் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுக்களில் இருந்து நம்மை காக்கிறது.

இந்த உணவுமுறை இதய பராமரிப்பிற்கு உதவுவதோடு மட்டுமல்லாது, இதயம் தொடர்பான நோய்கள் வராமலும் காக்கிறது.

உடல் சீராக இயங்க தேவையான சத்துக்களை இந்த உணவுமுறை உள்ளடக்கி உள்ளது. நீரிழிவு மற்றும் ஹைபர்டென்சன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்