ஆப்நகரம்

facts about breast : ஒரு மார்பகம் பெருசாவும் ஒரு மார்பகம் சின்னதாகவும் இருக்கா? இதுனால ஆபத்து வருமா?

பெண்களின் சிலருக்கு இரண்டு மார்பகங்களில் ஒன்று சற்று பெரியதாகவும் மற்றொன்று அதைவிட கொஞ்சம் சிறியதாகவும் இருக்கும் இதை கண்டு பயப்படுவார்கள் ஆனால் அப்படி இருப்பது இயல்பானதா அல்லது பிரச்சினை புரியாதா என்பது குறித்து மருத்துவர் கூறும் விளக்கத்தை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

Authored byமணிமேகலை | Samayam Tamil 31 May 2023, 8:43 pm
பெண்களின் உடல் சற்று வினோதமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நிறைய வேறுபடலாம் அதேபோல அவர்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த சந்தேகங்களை அவர்கள் வெளியில் சொல்லவும் சந்தேகங்கள் கேட்கவோ தயங்குவார்கள் அது போன்ற விஷயங்களில் ஒன்றுதான் இந்த மார்பகத்தின் அளவு பெரிதாகவும் சிறிதாகவும் இருப்பது.
Samayam Tamil uneven breast what the reasons in tamil
facts about breast : ஒரு மார்பகம் பெருசாவும் ஒரு மார்பகம் சின்னதாகவும் இருக்கா? இதுனால ஆபத்து வருமா?


​வேறுபட்ட அளவுகள்

பெண்களில் பலரும் தங்களுக்கு இருக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களை வெளியில் கேட்கவே தயங்குவார்கள் அதில் ஒன்றுதான் இந்த மார்பகத்தின் அளவு வேறுபட்டு இருப்பது தனக்கு மட்டும்தான் அப்படி இருக்கிறது என்று நினைத்து பயப்படுவார்கள் ஆனால் இதுபோன்று நிறைய பெண்களுக்கு இருக்கும் இதை கண்டு பயப்பட தேவையில்லை இது இயல்பான ஒன்றுதான்

uneven breast size

View this post on Instagram A post shared by Dr. Tanaya | Millennial Doctor (@dr_cuterus)

​மனித உடல் அமைப்பு

பொதுவாகவே ஆண் பெண் இருவருக்குமே மனிதர்களின் உடலமைப்பு இடது புறமும் வலது புறமும் ஒரே மாதிரியான அமைப்பை கொண்டிருப்ப தில்லை இரண்டுக்கும் சில நுண்ணிய வேறுபாடுகள் இருக்கும் அது போன்ற ஒரு அமைப்பில் அமைப்பு தான் இந்த மார்பகத்தின் அளவு பெரிதாகவும் சிறிதாகவும் இருப்பது பெண்களைப் போல ஆண்களின் விதைப்பையும் கூட ஒரு புறம் பெரிதாகவும் இன்னொரு புறம் சிறிதாகவும் இருக்கும்

​திருமணத்துக்கு பின் ஏற்படும் மாற்றம்

பெண்களின் சிலருக்கு திருமணத்திற்கு பிறகு இந்த பிரச்சனை உண்டாகும் குறிப்பாக அவர்களுடைய இடதுபுற மார்பகம் வலது புற மார்பகத்தை விட சற்று பெரிதாக இருக்கும் இதற்கு காரணம் பெண்கள் அல்ல ஆண்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்களாக இருப்பதால் பெண்களுடைய இடது மார்பகம் அளவில் பெற்று பெரிதாக இருக்கிறது. ஆனால் இந்த வேறுபாடு பெரிய அளவில் வெளியில் தெரியாது. அதனால் இது குறித்து பெரிதாக கவலைப்பட தேவையில்லை

எழுத்தாளர் பற்றி
மணிமேகலை
மணிமேகலை. இளநிலை ஆய்வாளர் பட்டப்படிப்பை (M.Phil) முடித்து கடந்த 9 ஆண்டுகளாக இணைய ஊடகவியல் துறையில் பணியாற்றி வருகிறேன். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நூல்களை வாசிக்கும் ஆர்வம் கொண்ட நான் ஆரோக்கியம், ஃபிட்னஸ், ஃபேஷன், மற்றும் வாழ்வியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறேன். தற்போது times internet-இன் கீழ் இயங்கும் சமயம் தமிழ் இணையதளத்தில் senior digital content producer ஆகப் பணியாற்றுகிறேன்... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்