ஆப்நகரம்

மெட்டபாலிசத்தை அதிகரிக்க காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின் என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி உங்கள் வளர்சிதை மாற்றத்தை 30 வயதுக்கு மேல் மேல் விரைவுப்படுத்த சில வைட்டமின்களை காலையில் எடுத்துக் கொள்ளலாம். அதில் குறிப்பாக நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் வைட்டமின் பி உணவுகளையோ அல்லது சப்ளிமெண்ட்டுகளையோ கட்டாயம் எடுத்துக் கொள்வது நல்லது.

Samayam Tamil 23 Mar 2021, 10:40 am
உடலின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுவே உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உறுதி செய்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றத்தை பொறுத்தவரை பி வைட்டமின்கள் நீங்கள் உண்ணும் உணவை உடைத்து ஆற்றலாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பதால் அது மிகவும் முக்கியமானதாகும்.
Samayam Tamil vitamin b should be taking every morning to quicken metabolism over 30 in tamil
மெட்டபாலிசத்தை அதிகரிக்க காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய வைட்டமின் என்ன?


​பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்

நீங்கள் வழக்கமான வைட்டமின் ஒன்றை சேர்க்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு வைட்டமின் பியை தேர்வு செய்யுங்கள். உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக செயல்ப்படுகிறதா என்பதில் உங்களுக்கு கவலைகள் இருந்தால் பி வைட்டமின்களின் ஏற்றம் உங்களுக்கு தேவையானதாக இருக்கும்.

​எப்படி செயல்படுகிறது?

இந்த வைட்டமின்கள் முழுமையாக செயல்ப்படும் வளர்சிதை மாற்றத்திற்கு இன்றியமையாதவை. பி வைட்டமின்களின் முக்கிய செயல்பாடு என பார்த்தால் உங்கள் உடலில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதற்கும் உணவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றலை பயன்படுத்துவதும் ஆகும். எடுத்துக்காட்டாக உடல் செல்கள் கார்போஹைட்ரேட்களை ஆற்றலாக மாற்றுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு ஆண்குறி சுருங்கும் அபாயத்தை ஏற்படுத்துமாம்... ஆய்வு சொல்சது என்ன தெரிஞ்சிக்கோங்க...

​வைட்டமின் பி2

குறிப்பாக வைட்டமின் பி2, ரைபோஃப்ளேவின், இவை இரண்டும் உங்கள் உணவை வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக மாற்றும், ரிபோஃப்ளேவின் உங்கள் உடலை உடைத்து உங்கள் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்கள், கொழுப்புகள் மற்றும் புரதங்களை உடைக்க உதவுகிறது மற்றும் உணவுகளை ஆற்றலாக மாற்ற வளர்சிதை மாற்றம் உதவுகிறது. மேலும் வைட்டமின் பி உங்கள் சருமம், குடலின் புறணி மற்றும் இரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இருக்க செயல்ப்படுகிறது.

மாதவிடாய் சமயங்களில் சிறுநீரகப்பாதை தொற்றும் ஏற்படுதா? அதனால் வேறு ஆபத்து வருமா? எப்படி தடுக்கலாம்...

​செரிமானப் பிரச்சினைகள்

பி வைட்டமின்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. ஆரோக்கியமான உடலின் கட்டுமான தொகுதிகளாக செயல்ப்படும் பி வைட்டமின்கள் உங்கள் ஆற்றல் மட்டங்கள், மூளை செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் இந்த வைட்டமின்கள் ஆற்றல் அளவுகள், செரிமானம் மற்றும் மூளையின் செயல்ப்பாட்டையும் ஆதரிக்கிறது.

மாதவிடாய் சமயத்தில் குடிக்க வேண்டிய 4 வகை டீ எவை?... வலியில்லாம இருக்க குடிங்க...

​பி வைட்டமின் உணவுகள்

பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் உங்கள் உணவில் உள்ள அனைத்து நன்மைகளையும் பெறுவதற்கான எளிய வழியாக உள்ளது. மேலும் பி வைட்டமின்கள் கொண்ட ஏராளமான உணவு வகைகள் உள்ளன.

சிட்ரஸ் பழங்கள்,

வெண்ணெய்,

தானியங்கள்

முட்டை

ஆகியவை பி வைட்டமின்கள் நிறைந்த உணவுகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்