ஆப்நகரம்

மரபணு குறைபாடு ஏன் உணடாகிறது... சொந்தத்தில் திருமணம் செய்வதும் காரணமா... டாக்டர் சொல்றத கேளுங்க...

நம் உடல் என்பது தாய் அல்லது தந்தையின் மரபணுவை சார்ந்தே இருக்கும். இதில், குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் உடல் ஊனம் அல்லது மன வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏன் மரபணு குறைபாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம் வாங்க.

Samayam Tamil 11 Oct 2021, 10:32 am
குழந்தை பிறக்கும் போது ஊனமாகப் பிறப்பது, மன வளர்ச்சி குன்றிய நிலையில் பிறப்பது போன்றவை பெற்றோர்களின் மன ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது அந்த குழந்தையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும் விஷயம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பொதுவாக மரபணு குறைபாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறோம் என்பது குறித்து குழந்தைகள் நலம் மற்றும் மரபணுவியல் நிபுணர் டாக்டர் எம். பிரதீப் குமார் அவர்கள் கூறும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Samayam Tamil what are the causes for genetic disorder
மரபணு குறைபாடு ஏன் உணடாகிறது... சொந்தத்தில் திருமணம் செய்வதும் காரணமா... டாக்டர் சொல்றத கேளுங்க...


​மரபணு குறைபாடு ஏன் ஏற்படுகிறது ?

நம் உடலின் ஒவ்வொரு செல்களிலும் மொத்தம் 46 குரோமோசோம்கள் இருக்கும். இந்த குரோமோசோம்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவை மரபணு குறைபாடு அல்லது மரபணு கோளாறு என்று அழைக்கப்படுகிறது. மரபணு குறைபாடு இரண்டு வகைகளில் ஏற்படும். ஒன்று பிறப்பிலேயே ஏற்படுவது, மற்றொறொன்று பிறந்த பின் ஏற்படும் குறைபாடு. சில நேரங்களில் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வதால் கூட, பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணு கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

​மரபணு குறைபாடு பொதுவானதா ?

மரபணு குறைபாடு ஏற்படுவது பற்றி நாம் அரிதாகவே கேட்டு இருப்போம். ஆயிரத்தில் ஒருவர் அல்லது பத்தாயிரத்தில் ஒருவருக்கு மரபணு சார்ந்த குறைபாடு ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரபணு குறைபாடு ஏற்படுவதில்லை. மரபணு குறைபாடு தொடர்பான பிரச்சனைகள் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மரபணு குறைபாடும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட்டால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...

​புரிதலும் சிகிச்சையும்

மரபணு குறைபாடு பொதுவானது இல்லை; குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று புரிந்து கொள்வது ஒரு தவறான புரிதல் ஆகும். மரபணு குறைபாடு ஏற்படுவது என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். பல மரபணு குறைபாடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்டறியப்படாமல் இருந்து இருக்கலாம். அல்லது அதற்குரிய சிகிச்சை இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால், தற்போது இருக்கும் மருத்துவ வசதியின் மூலம் பல மரபணு குறைபாட்டு பிரச்சனைகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இப்போது தான் அதிகமான மரபணு குறைபாட்டுப் பிரச்சனைகள் வருகின்றன என்று நாம் புரிந்து கொள்வதும் தவறான புரிதல் தான். இதுபோன்ற மரபணு குறைபாடுகள் பல ஆண்டுகளாகவே இருந்து இருக்கலாம்; ஆனால் அவை கண்டறியப்படாமல் இருந்து தற்போது கண்டறியப்படுகின்றன. உதாரணமாக, தசை சிதைவு நோய் என்று எடுத்துக் கொண்டால் அதில் 40 வகையானவை உள்ளன. ஒவ்வொரு தசை சிதைவு நோயும் ஒவ்வொரு மரபணு குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனையாகும்.

சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா? கூடாதா...

​பொதுவான குறைபாடு

சில இனத்தை சேர்ந்த மக்கள் அல்லது சில குடும்பத்தினருக்கு என்று சில குறிப்பிட்ட மரபணு குறைபாடுகள் ஏற்படுவது என்பது பொதுவானது தான். உதாரணமாக, ஊட்டி, கோத்தகிரி, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு பீட்டா தலசீமியா எனப்படும் நோய் ஏற்படுவது மிகவும் பொதுவானது தான். அந்த மலைவாழ் குடும்பங்களில் அனைவருக்கும் இதுபோன்று ஏற்படுவது பொதுவானது. அதேபோல், வட இந்தியர்களுக்கும் பீட்டா தலசீமியா நோய் ஏற்படுவது பொதுவானது தான்.

நார்ச்சத்து உணவுகள் அதிகம் கொண்ட உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்...

​உறவுக்குள் திருமணம்

சொந்தத்தில் திருமணம் செய்யும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்பு சார்ந்த மரபியல் குறைபாடு தென் இந்தியப் பகுதிகளில் தான் அதிகமாக உள்ளது. இதனை செய்ய அதற்குரிய சிகிச்சை முறைகளை கையாண்டு சரி செய்து கொள்ளலாம். இவர்களுக்குத் தான் மரபியல் குறைபாடு வரும்; இவர்களுக்கு வராது என்று இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் மரபணு குறைபாடு ஏற்படலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்