ஆப்நகரம்

பிசிஓஎஸ் பிரச்சனையோடு உடல் எடையும் அதிகமிருந்தால் இந்த நோய் தாக்கவும் வாய்ப்புண்டு!


பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பில் உண்டாகும் கோளாறுகளால் பிசிஓஎஸ் என்னும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் பிரச்சனை உண்டாகிறது.

Samayam Tamil 17 Sep 2020, 10:27 am
பெண்களுக்கு உண்டாகும் பிசிஓஎஸ் பிரச்சனை குறித்து விரிவாக பல முறை கொடுத்திருக்கிறோம். இந்த பாதிப்பை கொண்டிருக்கும் பெண்கள் அதிக உடல் எடையை கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் திருமணத்துக்கு பிறகு கருத்தரிப்பு தாமதமாகும் போதுதான் இவை கண்டறியப்படுகிறது.
Samayam Tamil what are the health issues that arise if you have obesity with the pcos problem
பிசிஓஎஸ் பிரச்சனையோடு உடல் எடையும் அதிகமிருந்தால் இந்த நோய் தாக்கவும் வாய்ப்புண்டு!


ஆண்களுக்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கு போது பெண்களின் உடலின் இன்சுலின் எதிர்ப்பு உருவாகிறது. இந்நிலையை கொண்டிருக்கும் பெண்கள் உடல் எடையை அதிகமாக கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாயை கொண்டு அதிக உடல் பருமனை கொண்டிருக்கும் பெண்கள் எல்லாரும் பிசிஓஎஸ் உடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு. இந்த உடல் எடை அதிகரிப்பால் வேறு சில நோய்களையும் எளிதாக பெற வாய்ப்புண்டு. அது குறித்து பார்க்கலாம்.

​பிசிஓஎஸ் - உடல் எடை

பிசிஓஎஸ் பிரச்சனை கொண்டிருக்கு ஒரு பெண் உடல் எடையை அதிகம் கொண்டிருந்தால் அவர் உடல் எடை குறைப்பதிலும் சிரமத்தை சந்திக்க கூடும். இந்த பிரச்சனை கொண்டிருக்கும் பெண்களுக்கு உடலில் இன்சுலின் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.


ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் ஆண்களை போன்று முகத்தில் தேவையற்ற இடங்களில் முடியும், எடை அதிகரிப்பு பிரச்சனையும் உண்டாகிறது. அதோடு எடையும் வேகமாக அதிகரிக்க தொடங்குகிறது.


மாதவிடாய், பிசிஓஎஸ் பிரச்சனை இருக்கிறவங்க இதையெல்லாம் சாப்பிடவே கூடாது, ஏன்னு தெரியுமா?


பிசிஓஎஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஊட்டச்சத்தும் உடற்பயிற்சியும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவை ஆண்ட்ரோஜன் சுரப்பை குறைத்து ஹார்மோனை சீராக்கும். பிசிஓஎஸ் பிரச்சனையால் உடல் எடை அதிகரித்து அதை கவனிக்காமல் அலட்சியம் செய்யும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிவோம்.

​கருத்தரித்தல் பிரச்சனை

பிசிஓஎஸ் பிரச்சனை கொண்டிருக்கும் பெண் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளாத போது அவை அதிகரித்து கருத்தரித்தலில் பிரச்சனையை உண்டாக்கும்.


ஹார்மோன் சுரப்பு கோளாறுகளில் ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிகரித்து கருமுட்டை வளர்ச்சியை குறைப்பதால் கருத்தரித்தலில் பிரச்சனை உண்டாகிறது ஆரோக்கியமான கருமுட்டை இல்லாத போது குழந்தைப்பேறு தாமதமாகிறது அல்லது தடைப்படுகிறது.

நீரிழிவு

பொதுவாக உடல் எடை அதிகரிப்பால் உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் பெருமளவு உண்டாக கூடும். ஹார்மோன் சுரப்பு மாற்றத்தால் இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்கனவே உடலை பாதித்திருக்கும் நிலையில் அவை டைப் 2 சர்க்கரை நோயை உண்டாக்கும் ஆபத்தும் பெருமளவு உண்டு.


பிசிஓஎஸ் பிரச்சனைக்கு தீர்வு கானாவிட்டால் நாளடைவில் எதிர்காலத்தில் அவர்களுக்கு நீரிழிவு கண்டிப்பாக வரக்கூடும். அதிலும் குடும்பத்தில் ஒருவருக்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் இவருக்கும் அவை வருவதற்கு சாத்தியம் உண்டு.

​உயர் ரத்த அழுத்தம்

உடல் எடை அதிகமாக இருக்கும் போது அதை குறைக்க முயற்சி செய்யாத நிலையில் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை நாளடைவில் இதய நோய்கள் வருவதற்கும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புண்டு. ரத்தத்தில் கொழுப்பும் அதிகரிக்கும். இவையும் இதயகோளாறை உண்டாக்கிவிடக்கூடும்.


பிசிஓஎஸ் பிரச்சனைக்கு உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கும் போது குறைந்த கொழுப்பு மிக்க உணவுகள் எடுத்துகொள்வதற்கு அறிவுறுத்துவதும் இதனால் தான். உடல் எடையை கட்டுக்குள் வைத்தால் பிசிஓஎஸ் குணமடைவதோடு இந்த நோய்களும் வராமல் தடுக்கலாம்.

​எண்டோமெட்ரியல் புற்றுநோய்

பிசிஓஎஸ் பிரச்சனை அறிகுறிகளை அலட்சியம் செய்து, சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால் அது நாளடைவில் எண்டோமெட்ரியல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.


Period Problems : ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை.. அறிகுறிகள்.. ஆபத்துகள்.. ஒவ்வொரு பெண்ணும் அறிய வேண்டிய விஷயங்கள்..


பிசிஓஎஸ் உடன் உடல் பருமன் பிரச்சனை வந்தால் இந்த நோயெல்லாம் வந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். இவை எல்லாமே பிசிஓஎஸ் தீவிர பிரச்சனையோடு உடல் பருமனும் இருந்து அதை கட்டுக்குள் கொண்டு வர தவறும் போது இந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு உண்டு என்பதால் தான் பிசிஓஎஸ் பிரச்சனையும், உடல் பருமனும் அலட்சியப்படுத்த கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்