ஆப்நகரம்

nipah virus symptoms: நிபா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன?

கேரளாவில் திருசூர் பகுதியில் நிபா வைரஸ் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆகவே, நிபா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்துப் பார்ப்போமா?

Samayam Tamil 4 Jun 2019, 12:21 pm
கேரளாவில் திருசூர் பகுதியில் நிபா வைரஸ் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆகவே, நிபா வைரஸின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்துப் பார்ப்போமா?
Samayam Tamil nipah 23233


நிபா வைரஸ் நம் உடலுக்குள் புகுந்து, அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் காலம் மூன்று நாள்களிருந்து, சில சமயங்களில் மூன்று வாரங்கள்வரை இருக்கும்.

நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்துவலி, தலைச்சுற்றல், வயிற்றுவலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்னை, என்சிஃபாலிடிஸால் (Enciphalitis) ஏற்படும் மனக்குழப்பம், உளறல் போன்றவை கூறப்படுகின்றன. இந்த நேரங்களில் பதற்றமடையாமல் நிதானம் காக்கவேண்டியது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதன் அறிகுறிகள் சுவாசம் தொடர்பானதாக இருந்தால், துரோட் ஸ்வாப் (Throat Swab) எனும் முறைப்படி பரிசோதனை செய்ய வேண்டும்.

இதுவே என்சிஃபாலிடிஸால் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், ரத்தத்தை எலிசா ஆர்.டி-பி.சி.ஆர் (Elisa RT-PCR) முறைப்படியும், வைரல் நியூட்ராலைசேஷன் டெஸ்டின் (Viral neutralisation test) மூலமாகவும் உறுதிசெய்துகொள்ளலாம். கோமா, மூளைக்காய்ச்சல்.

எனத் தீவிரமான அறிகுறிகள் தெரிந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்தவர்களும் உடனிருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருள்கள் அனைத்தையும் கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பேரியர் நர்ஸிங் (Barrier Nursing) மற்றும் ஐசோலேஷன் (Isolation) முறைப்படி சிகிச்சை அளிக்கப்படும். இன்றுவரை நிபா வைரஸுக்கு பிரத்யேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக ரைபாவாரின் (Ribavarin) மாத்திரைகளும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுமே அளிக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்