ஆப்நகரம்

தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டால் ஏற்படும் நன்மை என்ன?

மருத்துவ குணங்கள் நிறைந்தவை பூண்டு மற்றும் தேன். இவை இரண்டின் நன்மைகள் என்ன, எந்தெந்த உடல் பாதுப்புகளை போக்கும், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Samayam Tamil 25 Jan 2019, 1:25 pm
மருத்துவ குணங்கள் நிறைந்தவை பூண்டு மற்றும் தேன். இவை இரண்டின் நன்மைகள் என்ன, எந்தெந்த உடல் பாதுப்புகளை போக்கும், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
Samayam Tamil honey


தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் பலன் அதிகம் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். உடலில் சேர்ந்துள்ள கலோரிகளை எரிக்க உதவும்.

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, உடல் முழுவதும் அனுப்புகின்றன. இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்