ஆப்நகரம்

மாதவிடாய் நிற்கும்போது பாலியல் செயல்பாடுகள் தடைபடுமா?

மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகும் பாலியல் செய்லபாடுகள் இயங்கும் என கூறப்படுகிறது.

TNN 22 Dec 2016, 8:00 pm
வாஷிங்டன்: மாதவிடாய் முற்றிலுமாக நின்ற பிறகும் பாலியல் செய்லபாடுகள் இயங்கும் என கூறப்படுகிறது.
Samayam Tamil when does sexual function decline over menopause transition
மாதவிடாய் நிற்கும்போது பாலியல் செயல்பாடுகள் தடைபடுமா?


மாதவிடாய் நிற்கும் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதை பெண்கள் தவிர்க்கிறார்கள் என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இயற்கையாகவோ அல்லது ஹிஸ்டேரேக்டோமி மூலமாகவோ மாதவிடாய் நின்ற சுமார் பிறகு 1,400 பெண்களிடம் பாலியல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

கடைசியாக வந்த மாதவிடாயில் இருந்து 20 மாதங்களுக்கு முன்பு வரை பாலியல் செயல்பாட்டில் எவ்வித தடைகளும் இல்லை. அதேபோல், இறுதியாக வந்த மாதவியில் இருந்து பின்வரும் ஓராண்டில், 0.35% பாலியல் செயல்பாடுகள் குறைந்ததாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் செயல்பாடுகள் குறையத் தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பாலியல் செய்லபடுகளின் சரிவு கருப்பின பெண்கள் மத்தியில் குறைந்திருப்பதாகவும், வெள்ளையின பெண்களை விட ஜப்பானிய பெண்களுக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, மேலும், ஹிஸ்டேரேக்டோமி செய்துக் கொண்ட பெண்களின் கடைசி மாதவிடாய்க்கு முன்பு வரை பாலியல் உணர்வில் சரிவை சந்திக்கவில்லை என கூறியுள்ளனர். ஆனால், ஹிஸ்டேரேக்டோமி அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதவிடாய் நின்று 5 ஆண்டுகள் கழித்து பாலியல் உணர்வில் சரிவு ஏற்படுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் நிற்கும் போது, பெண்களின் பாலியல் உறுப்புகளில் வறட்சி, மன அழுத்தம், பதட்டம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் மாதவிடாயின் தாக்கத்தை விளக்காது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மாதவிடாய் நின்ற பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடாமல் இருப்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் உடலுறவு என்பதை சாதாரண தேவைகளில் இருந்து கட்டாய தேவைகளில் ஒன்றாக கருதுவதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

Debate on the contribution of menopause to sexual activities and functioning has alwyas been there.

அடுத்த செய்தி

டிரெண்டிங்