ஆப்நகரம்

cholesterol : உடம்புல கொழுப்பு ஏன் அதிகமாகுது தெரியுமா.. அதுக்கு காரணம் இந்த உணவுகள் தான்.. இனிமே கட்டுப்படுத்துங்க!

அதிக கொழுப்பை எடுத்துக் கொள்வது இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. அதனால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் எவையெல்லாம் கொழுப்பை அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.



Samayam Tamil 15 Sep 2022, 2:44 pm
கொழுப்பு என்பது புதிய செல்கள், ஹார்மோன்கள், செரிமான திரவங்கள், வைட்டமின் டி போன்ற பல பொருட்களை உருவாக்க உதவுகிறது. நம் உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். ஆனால் மக்கள் கொழுப்பு என்றாலே பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள். உடலில் கெட்ட கொழுப்புகள் தான் இதய நோய்கள், பக்க வாதங்கள் போன்றவற்றை உண்டாக்குகிறது என்பதால் கெட்ட கொழுப்புகளை அளிக்கும் உணவுகளை தவிர்ப்பதே நல்லது.
Samayam Tamil which foods raise your cholesterol level
cholesterol : உடம்புல கொழுப்பு ஏன் அதிகமாகுது தெரியுமா.. அதுக்கு காரணம் இந்த உணவுகள் தான்.. இனிமே கட்டுப்படுத்துங்க!




​நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பும்

உடலில் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இதய நோய்கள் உண்டாகிறது. மேலும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மாரடைப்பு, பக்க வாதம், பெரிஃபெரல் தமனி நோய் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


சைனஸ் பிரச்சனை ஏன் உண்டாகிறது.. .அறிகுறிகள் எப்படி இருக்கும்?


அதே நேரத்தில் இதய நோய் வராமல் தடுக்க உடலில் எச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பும் அவசியம்.உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் உண்டாகும் பிரச்சினைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

​அதிக கொழுப்பு ஏன் உண்டாகிறது?

உணவுமுறை பழக்க வழக்கங்கள்

குறிப்பாக வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான உடல் கொழுப்பு

புகைப்பிடித்தல்

உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல்

தைராய்டு ஹார்மோன் குறைந்து போதல்

ஆண்களில் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் பாதிப்பு

மெனோபாஸ்

நீரிழிவு நோய் பாதிப்பு

சில மருந்துகள், பீட்டா தடுப்பான்கள் மற்றும் டையூரிடிக்ஸ் உட்பட உடலில் கொழுப்பை அதிகரிக்க காரணமாகிறது. எந்த மாதிரியான உணவுகள் அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.

நாம் உண்ணும் உணவில் இருந்து உடலானது கொலஸ்ட்ரால் அளவை பெறுகிறது. சில கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கிறது.

​கொழுப்பை அதிகரிக்கும் சிவப்பு இறைச்சி

கொழுப்புகள் நிறைந்த மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை இதில் அடங்கும். இந்த கொழுப்புகள் எல்டிஎல் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. மெலிந்த இறைச்சிகள் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கிறது.


கோழி இறைச்சி : கோழி இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி இரண்டுமே ஒரே மாதிரியான கொலஸ்ட்ரால் அளவை கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் சிவப்பு இறைச்சியை தவிர அவ்வப்போது கோழி இறைச்சி சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழியாக இருந்தால் நல்லது.

​டிரான்ஸ் கொழுப்புகள்

டிரான்ஸ் கொழுப்புகள் இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மாட்டிறைச்சி மற்றும் பால் பொருட்களில் மிகக் குறைந்த அளவு டிரான்ஸ் கொழுப்புகள் இயற்கையாகவே காணப்படுகின்றன.

​பாமாயில் மற்றும் தேங்காயெண்ணெய் :

பாமாயில் மற்றும் தேங்காயெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம்.


diabetes and heart disease : டைப் 2 நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய இதய பரிசோதனைகள் இதுதான்.. மறக்காம டெஸ்ட் பண்ணுங்க!


எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது. பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளில் இவை காணப்படுகின்றன.

​பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் :

வெள்ளை மாவில் செய்யப்பட்ட உணவுகள், சிப்ஸ் வகைகள் மற்றும் குக்கீஸ்கள் போன்ற சிற்றுண்டிகளில் இவை காணப்படுகிறது. இந்த உணவுகளில் கொழுப்பு குறைவாக இருந்தாலும் அவை உங்கள் கொலஸ்ட்ரால் அளவை பாதிக்கலாம்.

​முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் சுமார் 200 மி. கி அளவிற்கு கொலஸ்ட்ரால் உள்ளது. எனவே இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் இல்லாமல் புரதத்தை மட்டும் பெற முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு வரலாம்.

​பால் உணவுகள்

பால் உணவுகளில் கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருக்கும். வெண்ணெய் எல்டிஎல் கொழுப்பை அதிகப்படுத்தினாலும், சீஸ் அதே விளைவைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.


hyperglycemia : இந்த காரணங்களாலதான் டக்குனு உடம்புல சர்க்கரை ஏறிடுதாம்.. இனிமே செய்யாதீங்க!


அதிக கொழுப்புள்ள பால் மற்றும் இதய நோய்களுக்கு இடையேயான தொடர்பை ஆய்வுகள் கண்டறியவில்லை. எனினும் உங்கள் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி கொழுப்பு குறைந்த உணவுகளை சேருங்கள்.



அடுத்த செய்தி

டிரெண்டிங்