ஆப்நகரம்

omicron mask : ஓமிக்ரான் தொற்று பரவுவதை 95% கட்டுப்படுத்தும் மாஸ்க் எது ? எப்படி பயன்படுத்தணும்?

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிறகு பரவலை தடுக்க எல்லோரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி கொண்டிருக்கிறோம். தற்போது ஓமிக்ரான் பெருந்தொற்று பரவலில் அதை தடுக்க என்ன மாதிரியான முகக்கவசத்தை அணிய வேண்டும் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

Samayam Tamil 17 Jan 2022, 1:55 pm

ஹைலைட்ஸ்:

  • உயர்ந்த வடிகட்டுதல் மாஸ்க் வகைகள் ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கின்றன.
  • . தொற்று இல்லாதவர்கள் முகக்கவசம் அணியும் போது அனைவருக்கும் பாதுகாப்பான கவசமாக மாறுகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil which type of mask protects against omicron variant in tamil
omicron mask : ஓமிக்ரான் தொற்று பரவுவதை 95% கட்டுப்படுத்தும் மாஸ்க் எது ? எப்படி பயன்படுத்தணும்?

கோவிட் 19 என்பது காற்றில் பரவும் நோய் என்பதால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடைய திரிபான ஓமிக்ரான் என்பது SARS-CoV-2 வைரஸின் மாறுபாடு. இது டெல்டா வைரஸை விட வேகமாக பரவக்கூடியது. எனினும் முறையான பாதுகாப்பை கடைப்பிடிக்க சரியான மாஸ்க் அணிவது அவசியம். உண்மையில் இது இதன் பரவலை வெகுவாக குறைக்கலாம்.
அனைவரும் சுவாசிக்கும் போதும், பேசும் போதும், பாடும் போதும், இருமும் போதும், தும்மும் போதும் துகள்கள் மற்றும் சிறு துளிகள் வெளியேறும். கொரோனா - 19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதிக்கப்படாத நபருடன் தொடர்பு கொள்ளும் போது பாதிக்கப்பட்ட நபரால் வெளியேற்றப்படும் நீர்த்துளிகள் வைரஸ் போன்று பரவலாம். இது மற்றவர்கள் சுவாசிக்கும் போது பாதிப்பை உண்டாக்கலாம்.

பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பான முகக்கவசத்தை அணியும் போது அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தை குறைக்கிறது. தொற்று இல்லாதவர்கள் முகக்கவசம் அணியும் போது அனைவருக்கும் பாதுகாப்பான கவசமாக மாறுகிறது.

corona symptoms : கொரோனா அறிகுறிகள் குழந்தைகள், டீன் ஏஜ் வயதினருக்கு எப்படி இருக்கும்? டாக்டர் சொல்வது என்ன?

மாஸ்க் வகைகள்

கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலோர் துணி முகமூடிகள் சர்ஜிகல் மாஸ்க், மெடிக்கல் மாஸ்க் மற்றும் உயர் வடிகட்டுதல் தன்மை கொண்ட மாஸ்க் என்று பலவற்றை பயன்படுத்துகிறோம். N95, KN95, KF94 மற்றும் FFP2 இவையெல்லாம் அடங்கும். ஆனால் இந்த மாஸ்க் அனைத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உண்டு. ஓமிக்ரானுக்கு எதிராக என்ன மாஸ்க் பயன்படுகிறது, என்பதையும் பார்க்கலாம்.


துணி மாஸ்க்

ஒரு நபரது மூக்கும் மற்றும் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்களை குறைக்கிறது. குறிப்பாக பெரிய அளவு வரும் நீர்க்குமிழ்களை குறைக்கிறது. ஆனால் சிறிய துகள்கள் வடிகட்டாததால் பாதிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு சிறிய பாதுகாப்பை வழங்குகிறது.

சர்ஜிகல் மாஸ்க்

சர்ஜிகல் மாஸ்க் மூன்று அடுக்கு வடிகட்டுதலை கொண்டவை என்றாலும் இவை முகத்தை முழுவதும் மூட உதவாது. மாஸ்க் மற்றும் விளிம்புகளுக்கும் முகத்துக்கும் இடையில் பெரிய இடைவெளியை உண்டு செய்யும். இதன் மூலம் வைரஸ் துகள்கள் வெளியேறலாம். உள்ளிழுக்கவும் செய்யலாம். சர்ஜிகல் மாஸ்க் பாதுகாப்பாக அணிய ஒரே வழி இரட்டை மாஸ்க் ஆக பயன்படுத்துவதுதான். இடைவெளிகளை குறைக்க சர்ஜிகல் மாஸ்க் பிறகு துணி முகமூடி அணியலாம்.

சிறந்த முகமூடிகள்

மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும் மாஸ்க் என்று அமெரிக்க N95 தரநிலை அல்லது உலகளாவிய தர நிலையில் ( ஐரோப்பிய FFP2, சீன KN95, கொரியன் KF94) கட்டமைக்கப்பட்டுள்ளன சரியாக பொருத்தப்பட்டால் அவை குறைந்தபட்சம் 95% (N95, KN95) அல்லது 94% (FFP2, KF94) துகள்களை வடிகட்டுகின்றன.

foods to eat before period : பீரியட்ஸ் டைம் வர்றதுக்கு முன்னாடியே இதை சாப்பிடுங்க, வலி இல்லாம இருப்பீங்க!

வால்வுகளை கொண்ட மாஸ்க் வகைகள் தவிர்ப்பதே நல்லது. இது காற்றை வெளியேற்றப்பட்டதை வடிகட்டாது. குறிப்பாக நோய்த்தொற்று இருப்பவர்கள் இதை அணியக்கூடாது.

உயர்ந்த வடிகட்டுதல் மாஸ்க்

துணி மற்றும் சர்ஜரி மாஸ்க் விட இந்த உயர்ந்த வடிகட்டுதல் மாஸ்க் வகைகள் ஓமிக்ரான் மாறுபாட்டிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கின்றன. இந்த மாஸ்க் அனைவரும் ப்யனடுத்தலாம். குறிப்பாக தொற்று அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள், சுகாதார பணியாளர்கள், கடுமையான கொரோனா தொற்றின் அபாயத்தில் உள்ளவர்கள் (நீரிழிவு, இதய நோய்) தொற்றுநோய்களின் ஆரம்ப கட்டங்களில் இத்தகைய மாஸ்க் பற்றாக்குறை இருந்தாலும் தற்போது என் 95 மாஸ்க் மற்றும் அதற்கு இணையான மாஸ்க் பெரிய அளவில் கிடைக்கிறது.

உயர்தரமான மாஸ்க் பயன்பாடு இல்லையெனில் சர்ஜிகல் மாஸ்க் மேல் துணி மாஸ்க் பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும்.

மாஸ்க் அணிந்த பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மாஸ்க் அணிந்த பிறகு அவை முகத்தில் சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சுகாதார அமைப்புகளில் என் 95 சரியானதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.

மூக்கை மூடாமல் கன்னம் மூடாமல் அணியப்படும் மாஸ்க் பொருத்தமற்ற மாஸ்க் ஆகும். இது வைரஸ் சுமந்த துகள்கள் பாதிக்கப்பட்ட நபருக்கு வெளிப்புறத்திலும் பாதிக்காத நபருக்கு உள் நோக்கியும் அனுமதிக்கிறது. சர்ஜிகல் மாஸ்க் மற்றும் துணி மாஸ்க் ஆனது தளர்வானதாகவும் பொருத்தமற்றதாகவும் மாறும்.


மாஸ்க் அணியும் போது அவை வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக கவர் செய்ய வேண்டும். முக விளிம்புகளில் முழுவதும் பொருந்தி இருக்க வேண்டும். சுவாசிக்கும் காற்று உள்ளிழுக்கும் வடிகட்டுதல் வழியாக மட்டுமே செல்கிறது. சரியாக பொருத்தப்பட்ட மாஸ்க் ஆனது ஹெட் பேண்ட்களுடன் வைக்கப்படுகிறது. இரட்டை ஹெட் பேண்டுகள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை சரியான பொருத்தத்தை அளிக்கின்றன. காதுகளுக்கு மேலே ஒன்று. தலைக்கு பின்னால் உள்ள சுழல்களில் கிளிப் அல்லது இறுக்கமான பேண்ட் மூலம் பாதுகாக்கும் வரை காது சுழல்கள் இறுக்கமான முத்திரை வழங்காது. மாஸ்க் அணிந்த பிறகு காற்றை வெளிப்புறமாக வீசுவதை உணர்ந்தால் உங்கள் முகத்தை நோக்கி அழுத்தவும்.

diabetes doubt: டயாபட்டீஸ் நோயாளிகளுக்கான எச்சரிக்கை அலாரம் சிறப்பு நிபுணர் சொல்வது என்ன?

மீண்டும் மீண்டும் அணியும் மாஸ்க்

என் 95 மாஸ்க் அதிக தூசிகளை வடிகட்டி காற்றை சுத்தம் செய்து உள் அனுப்பும் திறன்களில் தயாரிக்கப்படுகிறது. கட்டுமானப்பகுதிகளில் மட்டும் அல்லாமல் அதிக மாசு இருக்கும் இடங்களில் இதை பயன்படுத்தலாம். சாதாரண இடங்களில் சில நாட்களுக்கு பிறகும் கூட இவை உலர்ந்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு நாளுக்கு அதிகளவு வடிகட்டுதலை எதிர்கொண்ட மாஸ்க் அணிந்து தூசி இல்லாத வறண்ட சூழலில் 2- 3 நாட்களுக்கு வைத்துவிட்டு மீண்டும் அதை பயன்படுத்துவது நல்ல பழக்கமாக இருக்கலாம். பேண்ட் அல்லது இயர் லுப் உடைந்தால் மாஸ்க் பகுதி சரியாக மூடப்படாமல் இருந்தால் புதிய மாஸ்க் பயன்படுத்தவும்.

ஓமிக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் மற்றும் தடுப்பூசி இரண்டும் முக்கியமானவை. முயன்றால் அதிக வடிகட்டுதலை கொண்ட என் 95 மாஸ்க் பயன்படுத்தலாம். அல்லது சர்ஜிகல் மாஸ்க் உடன் துணி மாஸ்க் அடுக்கு அணிந்து பாதுகாப்பாக வெளியே சென்று வரலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்