ஆப்நகரம்

Srushti Dange: அட கடவுளே... கன்னக்குழி அழகு இல்லையாம்... குறைபாடாம்!

ஒருவரின் கன்னத்தில் குழி விழுந்தால் மிக அழகாக இருக்கிறது என கூறுவது வழக்கம். இது போன்று கன்னத்தில் குழி விழும் சில நடிகைகள், அந்த அழகால் சினிமாவில் பெரிய மார்க்கெட்டை தனக்கென உருவாக்கிய வரலாறும் உண்டு.

Samayam Tamil 29 Mar 2019, 11:02 am
பொதுவாக ஒருவருக்கு கன்னத்தில் குழி விழுந்தால் மிக அழகாக தெரிவது வழக்கம். லைலா, சிருஷ்டி டாங்கே, தீபிகா படுகோனே, அலியா பட் என பல நடிகைகள் கன்னத்தில் குழி விழும் அந்த அழகால் சினிமாவில் பெரிய மார்க்கெட்டை தனக்கென உருவாக்கிய வரலாறும் உண்டு.
Samayam Tamil Srushti Dange


சமீபத்தில் இந்த கன்னக்குழி அழகால் மிகப்பெரிய ரசிகர் வரவேற்பை பெற்றவர் சிருஷ்டி டாங்கே. அவர் நன்றாகா நடிக்கிறாரோ இல்லையோ அவரின் அழகிய கன்னக்குழி முகம் அனைவரையும் மயக்கி விடும்.

இப்படி பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்கள் கூட இந்த கன்னக்குழி அழகால் மேலும் அழகாக தெரிவது வழக்கம்.

கன்னக்குழி குறைபாடு!
இந்நிலையில் கன்னத்தில் குழி விழுவது அழகல்ல அது குறைபாடு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குழி கன்னத்தில் உள்ள தோலுக்கும், அதன் உள்ளே உள்ள தசைக்கு இடையே ஏற்படும் பிரச்னை காரணமாக ஏற்படுகின்றதாம். இந்த கன்னக்குழி சிலருக்கு லேசாகவும், சிலருக்கு நன்றாக குழி தெரியும் அளவுக்கு இருக்கும்.

நோயால் அவதிப்படும் சாய் பல்லவி...

இது ஒரு மரபியல் ரீதியாக தொடரும். கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிச்சயம் கன்னக்குழியுடன் தான் குழந்தையும் பிறக்கும்.

சூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்

கன்னக்குழி உள்ள ஒரு ஆணும், சாதாரண முகம் உள்ள பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளது.

கூகுளில் சென்று இப்படி எல்லாம் தேடிப்பாருங்கள்... உற்சாகம் ஆகிடுவீங்க

அதே போல் கன்னக்குழி உள்ள ஒரு பெண்ணும், சாதாரண முகம் உள்ள ஆணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கன்னக்குழியுடன் கூடிய குழந்தையும் பிறக்க 50% வாய்ப்பு உள்ளது.

கருப்பு தான் அழகு... வெள்ளை தோலாக்க முயற்சிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

அடுத்த செய்தி

டிரெண்டிங்