ஆப்நகரம்

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சிவப்பு பீன்ஸ் (ராஜ்மா) சாப்பிடலமா?

நீரிழிவு பிரச்சினை இப்போது எல்லா வீடுகளுக்குள்ளும் புகுந்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணமும் உணவுமுறை தான். கட்டுப்படுத்தவும் உணவுமுறை தான் தேவை. நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எந்த மாதிரி உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். அப்படி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஓர் உணவு பற்றி தான்.

Samayam Tamil 22 Jan 2022, 11:15 am
நீரிழிவு நோயாளிகள் என்ன தான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவர்கள் தொடர வேண்டிய மிக முக்கியமான விஷயம் உணவுகள் தான். குறைவான அளவு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர்.
Samayam Tamil why should add rajma in diet for diabetes in tamil
நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சிவப்பு பீன்ஸ் (ராஜ்மா) சாப்பிடலமா?


ஆனால் குறைவாக அளவைக் காட்டிலும் சர்க்கரைச் சத்து, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள, குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் உடைய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி குறைந்த குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட ஓர் உணவு தான் ராஜ்மா (சிவப்பு பீன்ஸ்). இதை ஏன் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

​சிவப்பு பீன்ஸ் (ராஜ்மா)

சிவப்பு பீன்ஸ் மிகக் குறைந்த கிளைசெமிக் குறீயீட்டைக் கொண்டது. தினசரி உணவில் ஒரு கைப்பிடி அளவுக்காவது சேர்த்துக் கொள்ளலாம்.

வேக வைத்தோ, சுண்டலாகவோ சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்ளும் நேரங்களில் மற்ற நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக இதை எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியமும் கூடும். தேவையில்லாமல் ஆரோக்கியமற்ற நொறுக்கித் தீனிகள் எடுத்துக் கொள்வதும் குறையும்.

​நார்ச்சத்து மிக்கது

சிவப்பு பீன்ஸில் நார்ச்சத்து அதிகம். அதேசமயம் குறைந்த அளவு கொழுப்பு நிறைந்திருக்கிறது.

ஒரு சிறிய கப் சிவப்பு பீன்ஸில் கிட்டதட்ட 6.4 கிராம் அளவுக்கு கரையும் நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.

​புரதச்சத்து

நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய அன்றாட உணவில் குறிப்பிட்ட அளவு புரதம் கட்டாயம் இருக்கும்படி உணவுமுறையை வைத்துக் கொள்ள வேண்டும்.

ராஜ்மா என்னும் சிவப்பு பீன்ஸ் கொழுப்பில்லாத முழுக்க புரதச்சத்து கொண்ட ஒரு மூலமாகும்.

ஒரு கப் சிவப்பு பீன்ஸில் கிட்டதட்ட 14 கிராம் அளவுக்கு புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால் அதிகமாக பசி இல்லாமல் நிறைவுடன் இருக்கும். அது ரத்த சர்க்கரையை நாள் முழுக்க நிர்வகிக்க உதவும்.

​பொட்டாசியம் சத்து

பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகம். ஆனால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

அதில் சர்க்கரை அதிகம். அதனால் பொட்டாசியம் நிறைந்த சிவப்பு பீன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

பொட்டாசியம் ரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டுமல்லாமல் உடலில் சோடியத்தின் தாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறைகின்றன.

​கார்போஹைட்ரேட்

சிவப்பு பீன்ஸில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. அதிலும் ஸ்லோ கார்ப்ஸ் என்று சொல்லப்படுகிற கார்போ இருக்கிறது. இது கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு நிறைத்த உணர்வைத் தரும். பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

​கிளைசெமிக் குறியீடு

சிவப்பு பீன்ஸ் மிகக் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டது.

ஒரு கப் சிவப்பு பீன்ஸில் (ராஜ்மா) கிட்டதட்ட 29 கிளைசெமிக் குறியீடு கொண்டிருக்கிறது. இது முட்டை, இட்லி ஆகிய எளிய உணவுகளின் கிளைசெமிக் குறியீட்டை விட குறைவானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்