ஆப்நகரம்

பனி காலத்துல சிறுநீரை அடக்கவே கூடாது... ஏன்?

பருவ காலங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப நம்முடைய உடலின் செயல்பாடுகளிலும் தகவமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர் மற்றும் பனி காலங்களில் நாம் மிக மிகக் குறைவாகவே தண்ணீர் குடிப்போம். ஆனாலும் அதிகமாக சிறுநீர் வெளியேற்றம் நடக்கும். இதற்கான காரணம் மற்றும் அதன் பின்னால் இருக்கும் சில அறிவியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Samayam Tamil 31 Oct 2020, 6:30 pm
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு பனிக்காலத்தில் அதிகமாக இருக்கும். இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு பனி காலத்தில் உண்டாகும்.
Samayam Tamil why should not control to pee in winter
பனி காலத்துல சிறுநீரை அடக்கவே கூடாது... ஏன்?

மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது பனி சமயங்களில் நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் குடிப்போம். ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். எத்தனை முறை தான் சிறுநீர் கழிப்பது என்று நினைத்து அடக்கி வைத்துக் கொள்வோம்.


​காரணங்கள்

இயற்கையுடன் நம் உடலின் உடற்கூறியல் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதற்கும் நிறைய சம்பந்தம் உள்ளது.

பனி காலத்தில் நம்முடைய உடலில் டையூரிசிஸ் என்னும் ஒரு செயல் தூண்டப்படும். அது தான் நம்மை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறது.

பனி காலத்தில் மிகக் குறைவாக வெப்பநிலை, இரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. உடல் உறுப்புகளில் அதிக இரத்த ஓட்டத்தை எடுத்து வருகிறது. அதோடு மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்த இரத்த ஓட்டம் சிறுநீரகங்கள் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் செல்கிறது. இந்த செயல்முறை வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்னும் இரத்த நாளச் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது.

​அடக்கி வைக்கக் கூடாது...

சிறுநீர் கழிக்காமல் சேமிக்கப்படும் முழு சிறுநீர்ப்பை என்பது உங்கள் உடல் வெப்பத்தை இழக்கும் மற்றொரு வழியாகும்.

உடனடியாக சிறுநீர் கழிப்பது உங்கள் உடல் வெப்பத்தை பாதுகாக்க உதவுகிறது.

பனி காலத்தில் மிகத்தீவிர குளிர்ச்சியை உடல் எதிர்கொள்கிறது.

நரம்புகள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும். உடல் அதிக அழுத்தத்தில் இருக்கும்போதும் இதே உணர்வு உண்டாகும். அப்படி அடக்குவது உடலின் வெப்பநிலையில் சமநிலையின்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்