ஆப்நகரம்

ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும்?

தூங்கும் நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உள்ளது என நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

TNN 10 Dec 2016, 2:54 pm
தூங்கும் நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உள்ளது என நம்மில் பலருக்கும் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் நாம் அதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. ஆனால், தூங்கும் நிலைக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.
Samayam Tamil why should we sleep left side
ஏன் இடது பக்கமாக தூங்க வேண்டும்?


பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியுமாம். எனவே தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டாக்ஸின்கள்:

இடது பக்கமாக தூங்கும் போது நிணநீர் வடிகால் மூலம் டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் தேங்கக்கூடும். ஆனால் இடது பக்கமாக தூங்கினால், இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும்.

செரிமானம்:

இடது பக்கமாக தூங்குவதால் செரிமானம் நன்கு செயல்படும். இரைப்பை மற்றும் கணையம் இயற்கையாக சந்திக்கும். இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெறும்.

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல்:

இடது பக்கம் தூங்குவதன் மூலம், அசிடிட்டியை உண்டாக்கிய இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

கொழுப்புக்கள் கரையும்:

கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து செரிமானத்திற்கு தேவையான பித்தநீர் சுரக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். அதிலும் இடது புறமாக தூங்கும் போது, பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடல் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படும்.

குடலியக்கம் சீராகும்:

இடது பக்கமாக தூங்கும் போது, உண்ட உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படும். இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றலாம்.
Why should we sleep left side ?

அடுத்த செய்தி

டிரெண்டிங்