ஆப்நகரம்

சாப்பிடும்போது எதற்காக சம்மணங்கால் போட வேண்டும்?

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் ரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது.

TOI Contributor 4 Apr 2017, 4:14 pm
நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் ரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்பகுதியில்தான் இருக்கிறது.
Samayam Tamil why we have to fold our legs and sit
சாப்பிடும்போது எதற்காக சம்மணங்கால் போட வேண்டும்?

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்குஜீரணம் நன்றாக நடைபெறும்.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இதுமட்டும் காரணமின்றி சம்மணங்கால் போட்டு அமர்வதும், உடலுக்கு பயிற்ச்சியைப் போன்றது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு இதை பழக்க வேண்டும்.

Why we have to fold our legs and sit?

அடுத்த செய்தி

டிரெண்டிங்