ஆப்நகரம்

தும்மலை ஏன் அடக்கக் கூடாது தெரியுமா?

தும்மல், இருமல், விக்கல் இது அனைத்தையும் அடக்க கூடாது என கூறுவார்கள். தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பாகும். நாம் தும்மும் போது

TNN 11 Dec 2016, 3:27 pm
தும்மல், இருமல், விக்கல் இது அனைத்தையும் அடக்க கூடாது என கூறுவார்கள். தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பாகும். நாம் தும்மும் போது நம் உடலுக்குள் நுழைய முயலும் பாக்டீரியா அல்லது ஏதேனும் தீமையான துகள்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும்.
Samayam Tamil why we should not ignore sneezing
தும்மலை ஏன் அடக்கக் கூடாது தெரியுமா?


அதன்மூலம், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் இருக்கும். அதேசமயம், அருகில் இருப்போருக்கு அசௌகரியம் ஏற்படாமல் தும்ம வேண்டும்.

தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும். நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும். ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல்நலத்தின் மீதும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம்.

தும்மல் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும்.

தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு விடும். அதிகரித்த காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைவதால் கண்கள் பாதிப்படையலாம் மற்றும் காதுகள் கேட்காமலும் போகலாம். வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது கழுத்து காயங்கள் மற்றும் இடைத்தடுப்பில் பாதிப்பு போன்றவைகளும் உண்டாகலாம். சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம்.

பிறருக்கு தொந்தரவை அளிக்கலாம் என்ற காரணத்தினால், தும்மலை நிறுத்துவது, நல்லதாகவும் ஒழுக்கமான ஒன்றாகவும் கருதப்படும். இருப்பினும், கண்டிப்பாக இது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம். கைக் குட்டைகளை வைத்தாவது தும்மி விட வேண்டும்.
Why we should not ignore Sneezing

அடுத்த செய்தி

டிரெண்டிங்