ஆப்நகரம்

நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்..

நீரிழிவு போன்ற வாழ்நாள் நோய்களை எதிர்கொள்பவர்கள் எல்லா காலங்களிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். வரும் குளிர்காலத்தில் நீரிழிவை கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும்.

Authored byதனலட்சுமி | Samayam Tamil 6 Dec 2022, 7:50 pm
குளிர்காலத்தில் என்ன உணவுகளை சேர்க்கலாம். எவை எல்லாம் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும். உங்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டாலே இரத்த சர்க்கரை அளவை தவிர்த்துவிடலாம். அப்படி நீங்கள் உங்கள் உணவு முறையை திட்டமிடும் போது இந்த உணவுகளை அவசியம் உணவில் சேருங்கள். முன்னதாக குளிர்காலத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
Samayam Tamil winter foods to add in diabetes diet in tamil
நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் எடுத்துகொள்ள வேண்டிய உணவுகள்..


​குளிர்காலத்தில் இரத்த சர்க்கரை அளவு

குளிர்காலத்தில் சத்தான உணவை திட்டமிடுவதற்கான நேரம். அதிலும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டும். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். வானிலை மாற்றத்தால் அலட்சியமாக இல்லாமல் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதும் முக்கியம். ஏனெனில் குளிர்காலத்தில் பனிபொழிவினால் உடற்பயிற்சியை தவிர்த்திருப்பீர்கள்.

மேலும் உணவு முறையில் உயர் கலோரி உணவுகளில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க செய்யலாம். மாறாக உங்கள் உணவு முறையில் இதை சேர்ப்பதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட கீரைகள்

பச்சை இலை கீரைகள் எல்லா காலங்களிலும் எளிதாக கிடைக்க கூடியவை இது இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சிறந்த மூலம். இது குறைந்த கார்ப் உணவு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.

கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் லூடின் ஆனது கண்பார்வையை மேம்படுத்தும். மேலும் ரெட்டினோபதியின் அபாயத்தை குறைக்கிறது.

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கீரையில் இருக்கும் பொட்டாசியம் இதய நோய்கள் தொடர்பான அபாயத்தை அதிகரிக்கிறது.

இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய புரதங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்கின்றன. மேலும் உடலில் இரத்த சோகை மற்றும் சோர்வு அபாயங்களை குறைக்கின்றன. மேலும் இது சிறந்த ஆக்ஸினனேற்றியாகும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க இவை உதவுகிறது. அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்ப் உள்ளடக்கம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு குளிர்காலத்தில் ஏற்ற சிறந்த உணவு என்று சொல்லலாம்.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட கேரட்

குளிர்காலத்தில் சிறந்த உணவில் நீரிழிவு நோயாளிகள் கேரட் சேர்க்க வேண்டும். இதை பச்சையாக அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.

கேரட் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். வைட்டமின் சி நிறைந்த ஆதாரம்.

கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் மூலம். இது கண் பார்வையை மேம்படுத்த உதவுவதோடு நீரிழிவு நோயான ரெட்டினோபதி தொடர்புடைய அபாயங்களை குறைக்கும். நடுத்தர அளவுள்ள கேரட் 4 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து வ்ழங்குகிறது.

கேரட் பசி ஆசைகளை கட்டுப்படுத்தவும் சரியான ஆற்றலை வழங்கவும் டைப் 2 நீரிழிவு அபாயத்தையும் குறைக்கவும் செய்கிறது.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட க்ரூசிஃப்ரூஸ் காய்கறிகள்

சிலுவை காய்கறிகள் என்று அழைக்ககூடிய காலிஃப்ளவர், பிரஸ்ஸல்ஸ், ப்ரக்கோலி, காலே போன்றவை குளிர்காலங்களில் அடங்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

மாவுச்சத்தில்லாத காய்கறிகள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் சி நிறைந்தவை. இந்த காய்கறிகளில் கிட்டத்தட்ட 7% நார்ச்சத்து உள்ளது. இது நார்ச்சத்து விகிதத்தை குறைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

இதில் உள்ள சல்பர், நைட்ரஜன் மற்றும் பிற வைட்டமின் தாதுக்கள் போன்றவை உடலின் வீக்கத்தை குறைக்க செய்கின்றன. காலிஃப்ளவரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் இதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

ப்ரக்கோலியில் இருக்கும் சல்போராபேன் என்பது ப்ரோக்கோலியில் இருக்கும் தனிமம். இது இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. கேலில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் சரியான இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட வெந்தயம்

வெந்தயம் சிறந்த நீரிழிவு எதிர்ப்பு மசாலா என்று சொல்லலாம். இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் வெளியீட்டை குறைக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

வெந்தயம் இன்சுலின் சுரப்பை அதிகரிப்பது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பது போன்ற நீரிழிவு எதிர்ப்பு குணங்களை இது கொண்டுள்ளது. இதில் 4HO-Ile எனப்படும் அசாதாரண அமினோ அமிலம் உள்ளது. இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வெந்தயம் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்து மென்று சாப்பிடலாம். அல்லது முளைகட்டி சாப்பிடலாம்.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையின் குணப்படுத்தும் பண்புகளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்துடன் இது உடலில் உள்ள நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை ஹீலிங் ஃபுட்ஸ் என்னும் புத்தகத்தின் படி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இரண்டு அளவையும் சீராக்க செய்கிறது. சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. மேலும் இது செரிமானத்தை குறைக்க செய்கிறது. இதை தேநீராக்கி குடிக்கலாம்.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட கிராம்பு

கிராம்பு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஜர்னல் நேச்சுரல் மெடிசனில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் நீரிழிவு எலிகளில் இரத்த சர்க்கரை குறைவு விளைவுகளை ஆய்வு செய்தது மற்றும் அதன் சாறு இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது கண்டறியப்பட்டது. உங்கள் தேநீரில் கிராம்பு கலந்து பருகலாம்.

​குளிர்காலத்தில் நீரிழிவு கட்டுப்பட சர்க்கரை வள்ளிக்கிழங்கு

நடுத்தர வடிவில் உள்ள குறைந்த ஜி.ஐ மற்றும் நல்ல அளவு நார்ச்சத்து உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கு வழக்கமான உருளைக்கிழங்குக்கு மாற்றாக இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இந்த குளிர்காலத்தில் உங்கள் உணவில் சேர்த்துகொள்ள இது சுவையானது.

தினமும் சிறு துண்டு சர்க்கரை வள்ளிக்கிழங்கு உங்களுக்கு பலவித நன்மைகளை அளிக்க செய்யும்.

எழுத்தாளர் பற்றி
தனலட்சுமி
நான் தனலட்சுமி சுந்தர். ஊடகத்துறையில் 24 வருடங்கள் சோர்வில்லாத பயணம். லைஃப்ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறேன். மருத்துவ நிபுணர்களின் பேட்டிகள், கட்டுரைகள் மக்களுக்கு எடுத்து செல்வதில் விருப்பம் அதிகம். ஆன்மிகம், அரசியல் செய்திகள், சினிமா செய்திகளிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு. தற்போது Times Internet நிறுவனத்தின் சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்