ஆப்நகரம்

ஆட்டிசம் - நோய் அல்ல! இதனை கவனியுங்கள் முதலில்!

கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகமான சொல்தான் ஆட்டிசம். பலரும் நினைப்பதுபோல, இது வியாதி இல்லை

TOI Contributor 1 Apr 2017, 3:08 pm
கடந்த தலைமுறையைவிட இந்தத் தலைமுறையினருக்கு ஓரளவு அறிமுகமான சொல்தான் ஆட்டிசம். பலரும் நினைப்பதுபோல, இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு, அவ்வளவே. போதுமான வழிகாட்டுதலும் பயிற்சிகளும் இருந்தால், இதில் இருந்து மீள்வதற்கு வழிகள் உண்டு.
Samayam Tamil world autism day mbbs course barely covers autism docs fail to detect it
ஆட்டிசம் - நோய் அல்ல! இதனை கவனியுங்கள் முதலில்!


இதுதான் ஆட்டிசம் என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. பல குறைபாடுகளின் ஒன்றிணைவு இது. நரம்பியல் குறைபாடு காரணமாக, மூளையின் செயல்திறனில் ஏற்படும் மாற்றம்தான் ஆட்டிசத்துக்கு வழி வகுக்கிறது. ஆட்டிசத்தின் முதன்மை விளைவுகளில் ஒன்று பலவீனமான சமூகத் தொடர்பு.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்

குழந்தைகளின் செயல்பாடுகளில் தெரியும் மாற்றத்தை வைத்தே, ஆட்டிசத்தை இனம் கண்டறிய முடியும்.

குழந்தைகள் புலம்பி அழாமலோ, தனக்குத் தேவையானதைச் சுட்டிக்காட்டாமலோ இருப்பது. ஒன்றரை வயது வரை, ஒரு சொல் வார்த்தைகளையோ, இரண்டு வயது வரை இரண்டு சொற்கள் கொண்ட சொற்றொடரையோ பேசாமல் இருப்பது.

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது. வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் இருப்பது, சமூகத் திறனில் குறைபாடு இருப்பது. பேசுகிறவரின் முகத்தையோ, கண்ணையோ பார்க்காமல் வேறெங்கோ பார்வையை அலையவிடுவது. நிறைய பொருட்களுடனும், பொம்மைகளுடனும் இருப்பது, அவற்றைச் சரியாகக் கையாளத் தெரியாதது. எதற்குமே புன்னகைக்காமல் இருப்பது.

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயோ அல்லது இரண்டு வருடங்களுக்குள்ளேயோ கண்டுபிடித்து விடலாம்.

இவற்றிற்கு முறையான பயிற்சிகள் அளிப்பதன் மூலம் ஆட்டிசம் குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்