ஆப்நகரம்

ஹெபடைடிஸ் எனும் கல்லீரல் வீக்கம்... யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு...

ஹெபடைடிஸ்' என்ற சொல்லுக்கு கல்லீரலின் வீக்கம் என்று பொருள். வைரஸ்கள், பிற தொற்றுகள், ஆல்கஹால் மற்றும் பிற இரசாயனங்கள் காரணமாக ஹெபடைடிஸ் ஏற்படலாம். நமது கல்லீரலை பொதுவாக பாதிக்கும் இரண்டு வைரஸ்கள் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி வைரஸ் ஆகும்.

Samayam Tamil 28 Jul 2020, 3:27 pm
இவற்றின் பெயர்கள் ஒத்திருந்தாலும், இந்த வைரஸ்கள் தொடர்புடையவை அல்ல. அவை ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு பரவும் விதத்திலும், நாள்பட்ட நோய்த்தொற்றை ஏற்படுத்தும் திறனிலும் வேறுபடுகின்றன. வைரஸ் ஹெபடைடிஸ் உள்ள ஒரு குடும்ப உறுப்பினர் உங்கள் வீட்டில் இருக்கலாம். வைரஸ் ஹெபடைடிஸ் என்றால் என்ன? அதற்கான ஆபத்து உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு வைரஸ் ஹெபடைடிஸ் தடுப்பூசிகள் தேவையா? என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
Samayam Tamil world hepatitis day 2020 causes symptoms and vaccines for a b types
ஹெபடைடிஸ் எனும் கல்லீரல் வீக்கம்... யாருக்கெல்லாம் வர வாய்ப்பிருக்கு...


​ஹெபடைடிஸ்

ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்பவை கல்லீரலின் நோய்கள் ஆகும். ஹெபடைடிஸ் என்பது கல்லீரலின் அழற்சி ஆகும், இது பெரும்பாலும் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது.

வைரஸால் ஏற்படும் ஹெபடைடிஸில் மூன்று பொதுவான வகைகள் உள்ளன: ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி. ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி நோயால் பாதிக்கப்படுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால், ஹெபடைடிஸ் சி க்கு தடுப்பூசி இல்லை. ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகியவை வெவ்வேறு வழிகளில் நமக்கு ஏற்பட்டாலும், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவலாம். அவர்களுக்கு ஒரேயே மாதிரியான அறிகுறிகள் தான் ஏற்படும். அவற்றில் வயிற்று வலி, காய்ச்சல், சோர்வு, மூட்டு வலி மற்றும் மஞ்சள் காமாலை (தோல் மஞ்சள் மற்றும் கண்களின் வெள்ளை) ஆகியவை அடங்கும்.

​ஹெபடைடிஸ் எப்படி பரவும்?

ஹெபடைடிஸ் ஏ - யு.எஸ் யில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஹெபடைடிஸ் ஏ நோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பேர் ஹெபடைடிஸ் ஏ வைரஸ்யால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அவர்களின் மலத்தில் இருந்து கண்டறிய பட்டுஉள்ளது. இது அசுத்தமான உணவு அல்லது நீர் அல்லது சில வகையான பாலியல் தொடர்புகளால் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. எனவே அவர்களை வைரஸ் நோய் தாக்கலாம், அது நமக்கு தெரிவது இல்லை. அவர்கள் அதனை இன்னும் எளிதாக பரப்ப முடியும். குழந்தைகளுக்கு இப்போது ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போடுகிறார்கள். ஹெபடைடிஸ் ஏ ஏற்படும் பெரும்பாலான மக்கள் இரண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக குணமடைவார்கள், இவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

​விளைவுகள்

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் தான், ஹெபடைடிஸ் ஏ கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் மற்றும் வயதானவர்கள் அல்லது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தும்.

ஹெபடைடிஸ் பி: ஒவ்வொரு ஆண்டும், யு.எஸ். இல் சுமார் 40,000 பேர் ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். கடுமையான ஹெபடைடிஸ் சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும். பல பாதிக்கப்பட்ட நபர்கள் வைரஸைத் ஒழித்து மற்றும் கடுமையான கட்டத்திற்குப் பிறகு வைரஸ் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும், மற்ற சிலர்க்கு, இவ்வைரஸ் உடலிலேயே தங்கி விடுகிறது. மேலும் அவை நாள்பட்ட ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றை உருவாக்குகின்றன, இது ஒரு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் சுமார் 1.2 மில்லியன் மக்களுக்கு நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உள்ளது. இவற்றில், 15% முதல் 25% வரை கல்லீரல் பாதிப்பு, சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் சிலர் ஹெபடைடிஸின் பி யின் விளைவாக இறக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், விந்து அல்லது பிற உடல் திரவங்களிலிருந்து ஹெபடைடிஸ் பி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது.

பல வருடங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் 7 உணவுப்பொருள்கள் என்னென்ன?

​ஊசி வாயிலாக,

யு.எஸ். இல், ஹெபடைடிஸ் பி பரவுவதற்கான பொதுவான வழி பாலியல் தொடர்பு ஊசிகள் அல்லது மருந்துகளை உட்செலுத்த பயன்படும் பிற உபகரணங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் இது பரவுகிறது என்று கண்டறியப்பட்டு உள்ளது. பிரசவத்தின் வழியாக ஒரு தாய் தனது குழந்தைக்கும் ஹெபடைடிஸ் பி நோயை பரப்பலாம். அசுத்தமான நீர், உணவு, சமையல், அல்லது பயன்படுத்தும் பாத்திரங்கள் அல்லது தாய்ப்பால், இருமல், தும்மல் அல்லது முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்பது போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் ஹெபடைடிஸ் பி கண்டிப்பாக பரவ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

​தடுக்க போடப்படும் தடுப்பூசிகள்

நமது நோயெதிர்ப்பு அமைப்பு ஒவ்வொரு நாளும் கெட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுடன் போராடுகிறது. அதாவது நமக்கு குளிர் வைரஸ் வரும்போது. அந்த குறிப்பிட்ட வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறோம். வைரஸை மீண்டும் வெளிப்படுத்தினால் நம் உடல் அதை எதிர்த்துப் போராடும் என்பதே இதன் பொருள்.

இதே பாதுகாப்பு தடுப்பூசிகளிலும் நடக்கிறது. இருப்பினும், ஒரு தடுப்பூசியின் நன்மை என்னவென்றால், உங்கள் உடலை நோயை எதிர்த்துப் போராட நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்க வேண்டியதில்லை. இந்த இரண்டு டோஸ் ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியைப் நாம் போட்டுக் கொள்ளும் போது , இப்போதிலிருந்து 30 வருடங்களுக்கு தேவையான, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை என் உடல் நினைவில் வைத்து விரைவாக ஆன்டிபாடிகளை மீண்டும் உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. ஹெபடைடிஸ் தடுப்பூசி வழக்கமாக இரண்டு முறை கொடுக்கப்படுகிறது மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி மூன்று முறை தொடர்ச்சியாக கொடுக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் ஆகிய சிவத்தல், வலி மற்றும் மென்மை ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த வைரஸ்களிலிருந்து நீண்டகால பாதுகாப்பைப் பெற, திட்டமிட்டபடி அனைத்து தடுப்பூசிகளை போடுவது முக்கியம் ஆகும். அளவுகளுக்கு இடையில் எவ்வளவு நேரம் கழிந்தாலும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டியதில்லை.

தூங்கும்போதும் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறதா? அந்த நோய்க்கு என்ன பெயர் தெரியுமா?

​தடுப்பூசிகளை யார் போட வேண்டும்?

தடுப்பூசிகள் முதன்முதலில் உருவாக்கப்பட்டதிலிருந்து, ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி தடுப்பூசிகள் வழக்கமான குழந்தை பருவ நோய்த்தடுப்பு அட்டவணையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் இவை வழக்கமான வயது வந்தோருக்கான நோய்த்தடுப்பு மருந்தாக கருதப்படுவதில்லை. நாம் பெரியவர்களைப் பற்றி பார்க்கும்பொழுது, அவர்களுக்கு தேவைப்பட்டால் அல்லது ஆபத்தான கட்டத்தில் இருந்தால் அவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். பெரியவர்களுக்கு ஆபத்து மிகவும் குறைவாக இருந்தால் இத்தகைய தடுப்பூசிகளை போட்டு கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

​ஹெபடைடிஸ் ஏ

ஹெபடைடிஸ் ஏ அதிகமாகப் பரவும் பகுதிகளுக்குச் செல்லுவது அல்லது பணிபுரிவது, ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஹெபடைடிஸ் ஏ வைரஸுடன் பணிபுரிபவர்கள் மற்றும் ஹெபடைடிஸ் ஏ உடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது,

நாள்பட்ட கல்லீரல் நோய் உள்ளவர்கள்,

ஓரினச் சேர்க்கையாளர்கள்

​காரணங்கள்

ஹெபடைடிஸ் ஏ அதிகமாகப் பரவும் பகுதிகளுக்குச் செல்லுவது அல்லது பணிபுரிவது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற மனிதர்களின் இரத்தத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அந்த மனித இரத்தத்தின் முலம் வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

எச்.ஐ.வி தொற்று, இறுதி கட்ட சிறுநீரக நோய் அல்லது நீண்டகால கல்லீரல் நோய் உள்ளவர்கள். ஹெபடைடிஸ் பி உள்ள ஒருவருடன் வாழும் மக்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டாளர்களைக் கொண்ட பாலியல் செயலில் உள்ளவர்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் - ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆகியோருக்கு இந்த பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து 15 நாள் குடிச்சா எவ்ளோ வெயிட் குறையும்னு தெரியுமா?

​ஹெபடைடிஸ் தடுப்பூசி

ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி பரவலாக இருக்கும் நாட்டிலிருந்து தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் இந்த ஹெபடைடிஸ் தடுப்பூசிகளைப் கண்டிப்பாக போட வேண்டும் என்றும் போலந்து பரிந்துரைக்கிறார். ஹெபடைடிஸ் தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எந்த வித விளைவுகளும் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை, அவை மிகவும் பயனுள்ளவை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்