ஹமாமெலிஸ்:
கடுமையான வெரிகோஸ் வெயின் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு முடிச்சுகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இரத்தப்போக்கு அல்லது வலி உண்டாகும். தொட்டாலே அதிக வலியை உணர்வார்கள்.
இத்தகைய கடும் ரத்தப் போக்கு மற்றும் திரவ வெளியேற்றத்தைத் தடுக்க இந்த ஹமாமெலிஸ் என்னும் மருந்து ஹோமியோபதியில் பயன்படுத்தப்படுகிறது.
பல்சட்டிலா:
கால்களில் அதிக கனமாகவோ அல்லது வலியாகவோ இருக்கும். வெரிகோஸ் வெயின் உள்ளவர்களுக்கு அந்த நரம்பு முடிச்சுகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருக்கும்.
இதன் காரணமான கால்களில் வீக்கம் ஏற்படுகிறவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்படுகிறது.
ஆர்னிகா:
ஆர்னிகா என்னும் மருந்து வெரிகோஸ் வெயின் பிரச்சினை உள்ளவர்களுக்கு உண்டாகும் ஹீமாடோமா என்னும் நரம்பு அழுத்தங்களைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்படும் ஹோமியோபதி மருந்து.
இது வெரிகோஸ் வெயினால் உண்டாகும் வீக்கம், சிராய்ப்பு, காயங்கள், ரத்தம் வடிதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஈஸ்குலஸ்:
ஈஸ்குலஸ் என்னும் மருந்தானது ஹோமியோபதியில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு கால்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம், கால்கள் கனமான இருப்பது போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கொடுக்கப்படுகிறது.
கால்களில் கூர்மையான வலியை உணர்கிறவர்களுக்கு இந்த மருந்து மிகவும் பயனளிக்கும்.
கால்கேரியா ஃபுளோரிகா:
கால்கேரியா ஃபுளோரிகா என்பது புடைத்து வீங்கியிருக்கும் நரம்புக் கோளாறான வெரிகோஸ் வெயினுக்காக முக்கிய மருந்தாக ஹோமியோபதியில் கொடுக்கப்படுகிறது.
இந்த மருந்து நரம்புகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்தம் உறைதல், அதிவேகமாக ரத்தம் பாயந்து நரம்புகள் சுருண்டு கொள்ளுதல் ஆகியவற்றை தடுக்கிறது.
மருத்துவ ஆலோசனை
நரம்புகள் புடைத்து வீங்கியிருக்கும் வெரிகோஸ் வெயின் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு ஹோமியோபதி சிகிச்சை நல்ல தீர்வைக் கொடுக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரேமாதிரி செயல்படும் என்று சொல்ல முடியாது.
அதனால் நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன் நன்கு ஒரு ஹோமியோபதி நிபுணரை சந்தித்து உங்களுக்கு இருக்கும் பிரச்சினையின் தீவிரத்தைச் சொல்லி ஆலோசனை கேளுங்கள்.