ஆப்நகரம்

உங்கள் மாதவிடாயில் எது நார்மல்? எது ஆபத்து?... தெரிஞ்சிக்கங்க...

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் இரத்த போக்கு சில சமயங்களில் அசாதாரணமாக இருக்கிறது. இதை அலட்சியமாக விட வேண்டாம் என்கிறார் மகளிர் நல மருத்துவர். முடிந்த வரை தீவிர இரத்த போக்கு இருந்தால் சிகிச்சை பெறுவது அவசியம் ஆகும்.

Samayam Tamil 1 Jul 2020, 5:39 pm
மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது சிக்கலான ஒரு விஷயம் தான். 5 அல்லது 7 நாட்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இந்த இரத்த போக்கு எப்பொழுதும் சாதாரண ஒன்றா. இல்லை சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. அதை எப்படி பெண்கள் கண்டறிய வேண்டும். எந்த சூழ்நிலை இக்கட்டான நிலை என்பது குறித்து மகளிர் நல மருத்துவர் கூறுகிறார்.
Samayam Tamil your vaginal bleeding when its normal and when its not
உங்கள் மாதவிடாயில் எது நார்மல்? எது ஆபத்து?... தெரிஞ்சிக்கங்க...


மாதவிடாய் காலங்களில் தீராத வயிற்று பிடிப்புகள், உடம்பு வலி இருக்கத்தான் செய்யும். சில பெண்களுக்கு 5 நாட்கள் மட்டும் இரத்த போக்கு ஏற்படுவதில்லை மாதவிடாய் காலங்களுக்கு இடையில் கூட இரத்தம் சிறுதளவு படுகிறது. இந்த இரத்த போக்கு அசாதாரணமான ஒன்று என்கிறார் மகளிர் நல மருத்துவர்.

​உண்மையில் எது அசாதாரணமானது

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலங்களுக்கிடையில், உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய் நின்ற பிறகு அல்லது கர்ப்ப காலத்தில் யோனி இரத்தப் போக்கு போன்றவை ஏற்பட்டால் அது நிச்சயமாக உங்கள் உடலில் ஏதோ பிரச்சினை இருப்பதை காட்டுகிறது. இந்த இரத்த போக்குகள் அதிகமாகவோ அல்லது நீண்ட நாட்கள் தொடர்ந்தால் இது பெரும் ஆபத்தின் அறிகுறியாகும்.

​இரத்தப் போக்கு ஏற்படக் காரணங்கள்

பெண்ணுறுப்பில் அசாதாரணமான இரத்தப் போக்கு ஏற்பட ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஏற்றத்தாழ்வு போன்றவை), தைராய்டு சுரப்பி பிரச்சினைகள் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இருக்கலாம் என அவர் கூறுகிறார்.

​இதர காரணங்கள்

கருப்பை நார்த்திசுக்கட்டிகள், பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ), ஒருவரின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, இடுப்பு அழற்சி நோய் (பிஐடி), யோனி, கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் கருப்பை சாதனங்களைப் பயன்படுத்துதல் போன்றவை பெண்ணுறுப்பில் இரத்த போக்கை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் யோனி இரத்தப்போக்கு ஏற்பட்டால், ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்படக்கூடும் என்று அவர் மேலும் விளக்குகிறார்.

எனவே இந்த மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் உடனே மகப்பேறியியல் மருத்துவரை சந்திப்பது நல்லது.

​மருந்துகள் இரத்த போக்குக்கு காரணமாக இருக்கலாம்

சில சமயங்களில் பெண்கள் சந்திக்கும் அதீத மன அழுத்தம் மற்றும் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட பெண்ணுறுப்பில் இரத்த போக்கு ஏற்பட வழிவகுக்கும். எனவே மன அழுத்தத்தை போக்க சிகிச்சை பெறுவது நல்லது.

பெண்ணுறுப்பில் இரத்தப் போக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுதல், அந்தப் பகுதியில் அரிப்பு அல்லது சிவத்தல், ஒழுங்கற்ற காலங்கள், அதிக யோனி வெளியேற்றம், வலிமிகுந்த உடலுறவு , அதிக இரத்தப்போக்கு ஆகியவற்றுடன் இருந்தால் பெண்கள் உடனே சிகிச்சை பெற வேண்டும்

​முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இரத்தப் போக்கிற்கான காரணத்தை கண்டறிந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

உங்கள் மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் அதிக அளவில் இரத்தப் போக்கு வந்தால் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும்.

இரும்பு (பீன்ஸ், கீரை) மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை (ஸ்ட்ராபெரி, கிவிஸ், ப்ரோக்கோலி) சாப்பிடுங்கள்.

உங்களுடைய எடையை சரியான அளவில் பராமரிக்க வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் மட்டுமே பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்க மன அழுத்தத்தை விரட்டவும், ஹார்மோன் மாற்றங்களை சமநிலைப்படுத்தவும் மருத்துவ சிகிச்சைக்கு செல்வது அவசியம் என்று மகப்பேறியியல் நிபுணர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்