ஆப்நகரம்

Rangoli for pongal: பொங்கலுக்கு கலர் கலர் ரங்கோலி டிசைன்கள்... உங்க வீட்லயும் ட்ரை பண்ணுங்க...

பொங்கல் என்றாலே பொங்கல் கரும்பு, பொங்கல் இதையெல்லாம் தாண்டி முக்கிய இடம் பெறுவது வண்ணமயமான கோலங்கள் தான். பொங்கலன்று காலையில் எழுந்ததும் கலர் கலர் கோலங்கள் இருந்தால் தான் பொங்கலாகவே அன்றைக்கு உணர முடியும். அப்படி இந்த வருடம் பொங்கலை சிறப்பாக கொண்டாட சில ரங்கோலி கோலங்களை உங்களுடன் பகிர்கிறோம். உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணி உங்கள் வீட்டு பொங்கலை வண்ணமயமாக்குங்கள்.

Samayam Tamil 14 Jan 2020, 11:41 am
பொங்கல் என்றாலே பொங்கல் கரும்பு, பொங்கல் இதையெல்லாம் தாண்டி முக்கிய இடம் பெறுவது வண்ணமயமான கோலங்கள் தான். பொங்கலன்று காலையில் எழுந்ததும் கலர் கலர் கோலங்கள் இருந்தால் தான் பொங்கலாகவே அன்றைக்கு உணர முடியும். அப்படி இந்த வருடம் பொங்கலை சிறப்பாக கொண்டாட சில ரங்கோலி கோலங்களை உங்களுடன் பகிர்கிறோம்.
Samayam Tamil best beautiful rangoli kolam designs with colours in tamil
Rangoli for pongal: பொங்கலுக்கு கலர் கலர் ரங்கோலி டிசைன்கள்... உங்க வீட்லயும் ட்ரை பண்ணுங்க...


​பொங்கல்

தமிழகத்தின் அறுவடை திருவிழா, உழவர் திருநாள் என்று பல பெயர்களால் அழைக்கப்படும பொங்கல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இந்த விழாவை மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி, லோஹ்ரி, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மாகி திருவிழா மற்றும் அசாமில் மாக் பிஹு போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் ஜனவரி 15 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. போகி 14 ஆம் தேதி.

பொங்கல் என்பது இயற்கையை வழிபடும் திருநாள். நமக்கு உணவு கொடுக்கும் உழவர்கள், விவசாயம் சார்ந்த பொருள்கள், சூரியன், மாடு, கால்நகைள், வயல் என அத்தனைக்கும் மரியாதை செலுத்தும் நாள். அதனால் பொங்கலில் பாரம்பரிய கிராமிய மணம் வீசும் சடங்குகள் நிறைய இருக்கும்.

கோலம்

அத்தகைய பொங்கல் அன்றைக்கு கிராமங்களில் உள்ள இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து நிறைய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள். அதில் முதன்மையாக இருப்பது கோலப்போட்டியாகத் தான் இருக்கும். அதற்காகவே இரவு முழுக்க விழித்து, பெண்கள் தங்களுடைய வீடுகளில் வண்ணப் பொடிகளால் தங்களுடைய கற்பனைத் திறனைப் பயன்படுத்தி கோலங்களை வரைவார்கள். இதற்காகவே இளம் பெண்கள் தங்களுக்குள் போட்டிப் போட்டிக் கொண்டு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே என்னென்ன கலர் வாங்கலாம், என்ன கோலம் போடலாம் என தேடிப்பிடித்து முடிவு செய்து வைப்பார்கள். அப்படி கோலத்திற்கு முக்கியத்துவம் தரும் பொங்கல் நாளில் சில ரங்கோலி கோலங்களும் அதற்கான ஐடியாக்களும் உங்களுக்காகக் கொடுக்கிறோம். உங்களுடைய வாசலை வண்ண மயமாக மாற்றிடுங்கள்.

​கோலத்தின் முக்கியத்துவம்

ரங்கோலி அடிப்படையில் வண்ணங்களின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. புள்ளி வைத்த கோலங்கள் அல்லது ரங்கோலி கோலங்களை உருவாக்குவது மக்களுக்கு மகிழ்ச்சியையும் நேர்மறையையும் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள். பொதுவாக ஏன் நிறைய வண்ணங்களை பொங்கல் திருநாளில் வீடுகளில் பயன்படுத்துகிறோம் என்றால், இயற்கையாக உள்ள உள்ள வெண்மை, காவி நிறங்களில் மற்ற நாட்களில் வீடுகளில் கோலம் போடுவது மங்கலத்தைக் குறைவாகவே கொண்டு வரும். வண்ணங்கள் வீட்டுக்கு நன்மையையும் வீட்டில் இருப்பவர்களுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அதனால் தான் நிறைய வண்ணங்களைப் பயன்படுத்தி கோலங்கள் போடுகிறோம். அதனால் தான் நான்கு நாள் பொங்கல் திருவிழாவில் கோலங்கள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

​என்ன கோலம் போடலாம்?

பொங்கலை தீமாக வைத்து கோலங்கள் போடுவது தான் வழக்கம். பானை, கரும்பு, மயில், மாடு இப்படி ஏதாவது அந்த கோலத்தில் இருக்கும். அதையும் தாண்டி வண்ண வண்ண கோலங்களை எப்படி போடலாம் என்று பாருங்கள்.

ஒரு நேர்த்தியான வடிவமைப்பை உருவாக்க நீங்கள் பல இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தலாம். வண்ணங்களை எவ்வளவுக்கு எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு மிக அழகான கோலம் முடிவில் உங்களுக்குக் கிடைக்கும்.

​வண்ணங்கள்

ரங்கோலி கோலத்தில் வெறும் வண்ணங்கள் மட்டும் நிரப்ப வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஏதேனும் தீம் அடிப்படையாக வைத்து, உங்களுக்குப் பிடித்த எந்த பொருளையோ கடவுளையோ வரையலாம். பொதுவாக மாடை விலங்கை வணங்குவது பொங்கல் அறுவடை பண்டிகையின் போது புனிதமாக கருதப்படுகிறது. இந்த பண்டிகை காலங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளை கழுவி உணவளிக்கும்போது, இந்த கோலம் வடிவமைப்பு சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாக தோன்றுகிறது.

​வண்ணமயம்

உங்களிடம் உள்ள கலர் பொடிகளின் தன்மைக்கு ஏற்ப பின்னணி வண்ணங்களை மாற்றி, பொங்கல் பண்டிகையின் தாத்பர்யங்களும் புண்ணியங்களும் உங்கள் வீடுகளை நிரப்பட்டும். அதற்கேற்ப கோலங்களை வண்ணமயமாக அமைத்திடுங்கள்.

ரங்கோலி என்பது அழகிய வண்ணங்களின் அற்புதமான கலவையாகும், இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான உணர்வுகளைத் தூண்டும். வரையக்கூடிய வடிவமைப்புகளின் வகைகளின் மூலம் உங்கள் எண்ணங்கள் கூட வெளிப்படும். கோலம் என்பதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதை வைத்து வரைபவரின் எண்ண ஓட்டங்களையும் கூட வெளிப்படுத்தும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்