ஆப்நகரம்

உயர் இரத்த அழுத்தமா? இந்த 10 மூலிகைகள் போதும் முழுசா கட்டுப்படுத்த...

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது என்பது எல்லாருக்கும் கடினமான விஷயமாக உள்ளது. இந்த உயர் இரத்த அழுத்தம் தான் பல்வேறு வகையான நோய்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் மூலம் இந்த உயர் இரத்த அழுத்தத்தை எப்படி நிர்வகிக்கலாம் என்பதை அறிந்து கொள்வோம்.

Samayam Tamil 11 Feb 2021, 11:16 am
இன்றைய சமூகத்தில் உயர் இரத்த அழுத்தம் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்றே கூறலாம். அதைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். இதற்கு நீங்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்தால் கூட நீண்ட காலம் அதை எடுத்துட்டு வர வேண்டிய சூழல் உண்டாக வாய்ப்புள்ளது.
Samayam Tamil 10 herbs and spices to lower high blood pressure in tamil
உயர் இரத்த அழுத்தமா? இந்த 10 மூலிகைகள் போதும் முழுசா கட்டுப்படுத்த...


அதற்குப் பதிலாக பல்வேறு நோய்களுக்கு மூலிகைகளும் மற்றும் மசாலாப் பொருட்களும் பெருமளவில் பயனளிக்கின்றன. உலகளவில் சுமார் 75% முதல் 80% மக்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். உயர் இரத்த அழுத்தத்திற்கும் சில வகை மூலிகைகள் உதவுகின்றன. அப்படி உயர் இரத்த அழுத்தத்திற்கு உதவும் மூலிகைகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.


​உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன

நம் இரத்த குழாயான தமனிகளில் ஏற்படும் அழுத்தமே உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தின் அளவு 120/80 மிமீ எச்ஜி ஆகும். இந்த அளவிற்கு மேல் அதிகமாகுவது தான் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

130 மிமீ எச்ஜிக்கு மேல் அதிகமாக இருந்தால் அது சிஸ்டோலிக் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. 80 மிமீ எச்ஜிக்கு குறைவாக இருந்தால் அது டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

​உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ளும் போது உங்களால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். பல மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.

​பூண்டு

பூண்டு வெவ்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளாகும். இதில் இதயத்திற்கு நன்மை அளிக்கும் நிறைய சேர்மங்கள் உள்ளன. பூண்டிற்கு நறுமணமும் பல மருத்துவ குணங்களும் காணப்படுகிறது. இதில் காணப்படும் மிக முக்கியமான பொருள் அல்லிசின் ஆகும். இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த நாளங்களை தளர்த்தவும் உதவுகிறது.

​செலரி

ஒரு சீன கோட்பாட்டின் படி செலரி ஆண்டிஹைபர்ட்டென்சிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவுகிறது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் என்பது கல்லீரல் செயல்பாட்டுடன் தொடர்புடையது. செலரி விதைச்சாறு இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. செலரி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன, உயர் ரத்த அழுத்தம் உடன் தொடர்புடைய தலைச்சுற்றல், தலைவலி மற்றும் தோள்பட்டை வலி ஆகியவற்றைப் போக்க வினிகருடன் செலரி ஜூஸை உட்கொள்ளலாம்.

​துளசி

துளசி ஒரு பிரபலமான மருந்து பொருளாகும். துளசியில் தாவர ஆக்ஸினேற்றியான யூஜெனோலில் நிறைந்துள்ளது. இது இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

​அஜ்வைன்

இது இந்திய மசாலா ஆகும் மற்றும் இந்தியாவில் அதிக இடங்களில் காணப்படுகிறது. இதில் ரோஸ்மரினிக் அமிலம் என்ற சுவையான கலவை காணப்படுகிறது. இது வீக்கம், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்தல், இரத்த ஓட்டம் அதிகரித்தல் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இதய துடிப்பை குறைக்க உதவுகிறது.

​இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை என்பது இலவங்க மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் நறுமணமான மசாலாப் பொருளாகும். பண்டைய காலங்களிலிருந்து, இதயம் தொடர்பான பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. இது இரத்த நாளங்களை நிதானமாக வைக்க உதவுகிறது.

​க்ரீன் ஓட்ஸ்

க்ரீன் ஓட்ஸில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் ஆண்டிஹைபர்ட்டென்சிவ் மருந்துகள் காணப்படுகின்றன. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. லிப்பிட் மற்றும் குளுக்கோஸின் அளவை மேம்படுத்துவதோடு இருதய ஆபத்தையும் குறைக்கின்றன.

​ஆளி விதைகள்

ஆளி விதைகள் மற்றும் அவற்றின் எண்ணெய்களில் α- லினோலெனிக் அமிலம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளன. இவை இதய நோய்கள், அழற்சி குடல் நோய், கீல்வாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கின்றன என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஆளிவிதை கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் பெருந்தமனி தடிப்பு இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கக்கூடும். ஆளி விதைகளை தினமும் 15 முதல் 50 கிராம் வரை உட்கொள்வது மொத்த கொழுப்பைக் குறைக்கும்.

​இஞ்சி

இஞ்சி என்பது பல்துறை மசாலா ஆகும். இது இதய ஆரோக்கியத்தின் பல அம்சங்களை மேம்படுத்த உதவுகிறது. கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இரத்த நாளங்களை தளர்த்தவும் இயற்கையான சேனல் தடுப்பானாக இஞ்சி செயல்படுகிறது. எனவே உங்க அன்றாட பானங்களில் நீங்கள் இஞ்சியை சேர்த்து வரலாம்.

​ஏலக்காய்

ஏலக்காய் ஒரு பிரபலமான மசாலாப் பொருளாகும். இது ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கையான கால்சியம் சேனல் தடுப்பானாக செயல்படுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இது சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கிறது.

​பார்சிலி

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு உணவுகளில் பிரபலமான மூலிகை பார்சிலி ஆகும். இது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பல்வேறு சேர்மங்களைக் கொண்டுள்ளது.

எனவே மேற்கண்ட மூலிகை மற்றும் மசாலாப் பொருட்களுடன் உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றை நீங்கள் மேற்கொண்டு வரலாம். உயர் இரத்த அழுத்தம் குறித்த விஷயங்களை உங்க மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்