ஆப்நகரம்

குளிர்காலத்தில் எடையைக் குறைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் 9 மசாலா பொருள்கள்...

மசாலா பொருட்கள் உங்களுக்கு பிடித்த உணவு பொருட்களில் சுவையை அதிகரிக்க மட்டும் பயன்படுவதில்லை. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. மக்கள் எப்போதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள். எடை இழப்பை விரும்புபவர்கள் முற்றிலும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும். ஆனால் அவற்றை சுவை நிறைந்த உணவுகளாக மாற்றுவது நமது கையில் தான் உள்ளது.

Samayam Tamil 19 Dec 2020, 4:40 pm
இந்தியா மசாலாக்களுக்கு பெயர் பெற்ற நாடாகும். கிழக்கிந்திய கம்பெனியே இந்தியாவில் மசாலா வர்த்தகத்திற்காகதான் முதன் முதலாக வந்தனர். இந்திய மசாலாக்கள் உணவின் சுவையையே மாற்றி அமைக்கின்றன.
Samayam Tamil 9 nutritionist recommended spices for lose weight this winter in tamil
குளிர்காலத்தில் எடையைக் குறைக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் 9 மசாலா பொருள்கள்...


அதே நேரத்தில் பண்டைய காலத்தில் பல நோய்களை குணப்படுத்துவதற்காக மசாலா பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் நீங்கள் உண்ணும் தினசரி உணவை குறைந்த எண்ணெயில் சமைக்கப்படுவதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இங்கே எடை இழப்பிற்கு உதவக்கூடிய சில மசாலா பொருட்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.

​மஞ்சள்

இது ஒரு ஆயுர்வேத மருந்தாக பார்க்கப்படுகிறது. இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. மேலும் இது அழற்சி, எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இது ஒரே நொடியில் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. மேலும் இது உடலில் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மஞ்சள் உதவுகிறது.

மஞ்சள் தேநீர், மஞ்சள் பானம், மற்றும் மஞ்சளை சூப் செய்து சாப்பிடலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் தினமும் காலையில் நீரில் தேனுடன் மஞ்சளை கலந்து குடிக்கலாம்.

​சீரகம்

முதல் நாள் இரவே சீரகத்தை ஊற வைத்துவிட்டு பிறகு காலையில் ஒரு சீரக தண்ணீரை அருந்துவதன் மூலம் உங்களது நாளை சிறப்பாக துவங்க முடியும். உடல் பருமனை சமாளிப்பதில் இது உதவிப்புரிகிறது. நீங்கள் சீரகத்தை கறி, பருப்பு வகைகள், ரொட்டி, சூப்கள் போன்றவற்றிலும் சேர்க்கலாம்.

​​வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் திருப்திப்படுத்த உதவுகிறது. இதனால் அதிகப்படியான உணவு உண்பதை இது தடுக்கிறது. இதில் மியூசிலாஜினஸ் ஃபைபர் அதிகமாக காணப்படுகிறது. இது செரிமான அமைப்பை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுக்காக்க உதவுகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க முக்கியமான பொருளாக வெந்தயம் உள்ளது. வெந்தயம் ஊற வைத்த நீர் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

​இஞ்சி

இஞ்சி பசியின்மை மற்றும் கொழுப்பு உறிஞ்சுதலை குறைக்க உதவுகிறது. மேலும் இது கொழுப்பு எரியும் தன்மையையும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சர்க்கரையின் அளவை இஞ்சி கட்டுப்படுத்துகிறது.

பண்டை காலம் முதலே இஞ்சி பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக பயன்பட்டுள்ளது. இப்போது இஞ்சியில் உடல் எடையை குறைக்கும் பண்புகள் இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் தேநீர், சூப்கள், சாலட்களில் இஞ்சியை சேர்க்கலாம். அல்லது காலையில் வேக வைத்த இஞ்சி நீரை குடிக்கலாம்.

​இலவங்கப்பட்டை

இது மரத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மசாலா பொருள் ஆகும். இது எடை இழப்பிற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் நிரம்பியுள்ளது. இலவங்கப்பட்டை வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பு எரியும் செயல்முறையும் அதிகரிக்கிறது. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி பசி ஏற்படுவதை குறைக்கிறது.

ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கலாம் அல்லது ஒரு கிளாஸ் சூடான பாலுடன் கலந்து குடிக்கலாம். காலையில் உண்ணும் ஓட்ஸ் அல்லது கோழி போன்ற உணவுகளில் இதை சேர்க்கலாம்.

​கருப்பு மிளகு

கருப்பு மிளகில் அதிக அளவில் ஃபைபர் உள்ளது. இது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அதை பலப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களுக்கு எதிராக போராட இது உடலை தயார்ப்படுத்துகிறது. இதன் மூலப்ப்பொருள் உடலில் கொழுப்பு உருவாவதை தடுக்கிறது.

மேலும் விரைவாக எடையை குறைக்க மிளகு உதவுகிறது. இதை தேநீரோடு கலந்துக் குடிக்கலாம். அல்லது எலுமிச்சை மற்றும் பாலுடன் மிளகை கலந்து குடிக்கலாம்.

​பெருஞ்சீரகம்

ஆண்டி ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்ட பெருஞ்சீரகம் வைட்டமின் ஏ, டி மற்றும் சி போன்ற பல்வேறு வைட்டமின்களை கொண்டுள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் செரிமான அமைப்பையும் இது மேம்படுத்துகிறது.

இது பசி ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. இந்த வழியில் இது எடை இழப்பிற்கு உதவுகிறது. ஊற வைத்த பெருஞ்சீரக விதைகள் தினமும் காலையில் காலையில் எடுத்துக்கொண்டு உங்கள் நாளை துவங்குங்கள். மேலும் உங்கள் காலை உணவில் சிறிது பெருஞ்சீரகத்தை சேர்க்கலாம்.

​ஏலக்காய்

ஏலக்காய் ஒரு மூலிகையாகும். இது உடலில் கொழுப்பை எரிக்க திறம்பட உதவுகிறது. மேலும் இது செரிமான அமைப்பை தூண்டுகிறது. இது வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. சிறந்த எடைக்குறைப்பு முடிவுகளை பெற நீங்கள் தினமும் 3 முதல் 4 ஏலக்காய்களை மென்று திண்ணலாம்.

உங்கள் காலை தேநீரில் ஏலக்காயையும் சேர்க்கலாம். உங்களது உணவில் கூட ஏலக்காய் தூள்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். இது உணவின் நறுமணத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எடை இழப்பிற்கும் உதவுகிறது.

​மிளகாய்

மிளகாய் மசாலா எப்போதும் வயிற்றால் வேகமாக உறிஞ்சப்படும் பொருளாக உள்ளது. மேலும் இதை சிறிய அளவில் உட்கொள்ளும்போது அது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மிளகாயில் உள்ள கேப்சைசின் ஒரு தெர்மோஜெனிக் விளைவை ஏற்படுத்துகிறது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்கிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிளகாய் உதவுகிறது.

நம் சமையலறையில் எப்போதுமே பண்டைய காலங்களில் மருந்தாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு மசாலா பொருட்கள் இருக்கின்றன. இந்த மசாலா பொருட்கள் இல்லாமல் இந்தியாவில் எந்த சமையலும் முழுமையடையாது. நீங்கள் விரும்பும் எந்த உணவிலும் இதை சேர்க்கலாம். நீங்கள் ஆரோக்கியமான உணவில் ஈடுபடுவதன் மூலம் எடை இழப்பை எளிதாக பெற முடியும். எனவே இந்த குளிர்காலத்தில் எடையை இழப்பு உணவுகள் அல்லது உணவில் மசாலாக்கள் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்